நுங்கு பறித்த கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Student

ஸ்ரீபெரும்புதூர் அருகே நுங்கு பறிக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள திருமாங்காடு கிராமத்தில், டெல்லி கணேஷ் மற்றும் தட்சிணாமூர்த்தி என்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் பனை மரத்தில் நுங்கு பறிக்க முயன்றனர். அப்போது, இரும்புக் கம்பியைக் கொண்டு மின்மாற்றியில் சிக்கியிருந்த நுங்கை எடுக்க முயற்சித்தனர். இதில் மின்சாரம் தாக்கி இரு மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share