சமூக வலைதளங்களில் “Miss U Da Thambi” என்ற வாசகம் பலரது பதிவுகளிலும் அதிரவைத்துக் கொண்டிருக்கிறது.
தென் தமிழ்நாட்டின் பாரம்பரிய குதிரை வண்டிப் பந்தயமான ‘ரேக்ளா ரேஸ்’-ல் தனக்கென தனி முத்திரை பதித்த சிறுவன்தான் கணேசன்.

ரேக்ளா ரேஸ் பந்தயங்களில் மூத்த அனுபவம் வாய்ந்த ஜாக்கிகளுக்கு மத்தியில் 16 வயது கணேசன், குதிரை வண்டியை ஓட்டும் அசால்ட்டான லாவகம், அவருக்கு என தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொடுத்தது.
ரேக்ளா ரேஸில் கணேசன் வெல்கிறாரா? என்பதை எல்லாம் விட கணேசன், எப்படி குதிரை வண்டியை ஓட்டுகிறார் என சிலாகித்தபடியே பார்ப்பதற்கு என தனி கூட்டம் எப்போதும் இருந்து வந்தது.
இந்த சிறுவன் கணேசன், சிவகங்கை மாவட்டம் பேயன்பட்டியைச் சேர்ந்தவர். இன்று ஜூலை 28-ந் தேதி ரேக்ளா ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டுவிட்டு சொந்த ஊர் திரும்பிய போது நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி கணேசன் உயிரிழந்துவிட்டார்.
கணேசனின் திடீர் மறைவுக்கு சோசியல் மீடியாவில் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
