கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாக பரவுவது தவறான தகவல் என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
பரவும் செய்தி
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயர் பண்டிதர் அயோத்திதாசர் நவீன பேருந்து நிலையம் என்று மாறுகிறது என சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
“கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றம் செய்ய இருப்பதாக சமூகவலைதளங்களில் பரவும் தகவல் தவறானது” என சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA ) தெரிவித்துள்ளது.
தவறான தகவலைப் பரப்பாதீர் !
முடிவு
இது தவறான தகவல் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
