சருமம் முதல் முடிப் பிரச்னை வரை தீர்க்கும் வேப்பிலை குளியல்.. இதோ லிஸ்ட்!

Published On:

| By Santhosh Raj Saravanan

Skin to  Dandruff  Control Neem Leaf Water Bath Benefits

வேப்பிலையை (Neem Leaf) கொதிக்க வைத்து குளிப்பது சருமம், முடி, தோல் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது.

வேம்பு வெறும் கசப்பு மட்டுமல்ல, அது இயற்கையால் வழங்கப்பட்ட மருந்துகளின் களஞ்சியமாகும். நமக்கு இயற்கையாகவே கிடைக்கும் வேப்பிலைகளில் பல்வேறு மருத்துவப் பண்புகள் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக சருமம், முடிப் பிரச்சனைகளுக்கு வேப்பிலை மிகுந்த நன்மை (Neem Water Benefits) அளிக்கிறது.பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்ட வேப்ப இலையைத் தண்ணீரில் கொதிக்க வைத்து குளித்தால், அது உடலுக்கும் மனத்திற்கும் பல்வேறு நன்மைகளை அளிக்கிறது.

ADVERTISEMENT
வேப்பிலை தண்ணீர் தயாரிக்கும் முறை

ஒரு கைப்பிடி அளவு புதிய வேப்ப இலைகளை எடுத்து நன்றாகக் கழுவ வேண்டும். ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி வேப்பிலையை அதில் இட்டு பத்து நிமிடங்கள் (Neem Leaf Bath) கொதிக்க வைக்கவும். தண்ணீர் பச்சை நிறமாக மாறி வேப்ப இலையின் மணம் வரும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து, வேப்ப இலைகளை வெதுவெதுப்பாக விடவும். இந்தத் தண்ணீரை உங்கள் குளியல் தண்ணீருடன் கலந்து குளிக்கவும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதைச் செய்தால் போதுமானது.

தோல் தொற்று நோய்களுக்கு தீர்வளிக்கிறது

வேப்ப இலைகளில் நிம்பிடின் மற்றும் அசாடிராக்டின் எனப்படும் பண்புகள் உள்ளன. இவற்றுக்கு பாக்டீரியா, பூஞ்சைகளைக் கொல்லும் சக்தி உள்ளது. உடலில் அரிப்பு, கொப்புளங்கள், தடிப்புகள் (Neem For Skin) இருந்தால் வேப்ப நீரில் குளிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கோடை காலத்தில் குழந்தைகளின் கொப்புளங்களுக்கு வேப்ப நீர் சிறந்தது. இது தினசரி வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தையும் குறைக்கிறது. கால்விரல் மூட்டுகளில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றுகளுக்கு, வாரத்திற்கு மூன்று முறை உங்கள் பாதங்களை வேப்ப நீரில் ஊறவைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ADVERTISEMENT
முகப்பரு மற்றும் கரும்புள்ளி நீக்கம்

முகத்தில் முகப்பருக்களோ அல்லது கரும்புள்ளிகள் (Neem For Pimples cure) இருந்தால் வேப்ப நீரில் குளிக்கவும். வேம்பு ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. இது சருமத் துளைகளில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெயை நீக்குகிறது. இதனால் முகப்பருக்கள் ஏற்படுவது குறைகிறது. பழைய முகப்பருத் தழும்புகளும் மெதுவாக மறைந்துவிடும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தங்கள் முகப் பொலிவை அதிகரிக்க வாரத்திற்கு இரண்டு முறை வேப்ப நீரில் குளிக்கலாம்.

பொடுகு மற்றும் முடி உதிர்தலுக்கு தீர்வு

உங்களுக்கு அரிப்பு, பொடுகு அல்லது தலையில் பேன் (Neem Control Dandruff )போன்ற பிரச்சனைகள் இருந்தால் வேப்ப இலை கஷாயம் மூலம் உங்கள் தலையைக் கழுவுங்கள். வேம்புவின் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் பொடுகை நீக்குகின்றன. உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகள் குறைவதால் முடி உதிர்வதும் நின்றுவிடுகிறது. முடியின் வேர்கள் வலுப்பெறுகின்றன.

ADVERTISEMENT
உடல் அழற்சி மற்றும் சோர்வைக் குறைக்கிறது

கோடை காலத்தில் உடல் சூடாகி சோர்வடைகிறது. வேப்ப இலை (Neem Water Benefits) நீரில் குளிர்ச்சி தரும் பண்புகள் உள்ளன. மாலையில் வேலை முடிந்ததும் வேப்ப நீரில் குளித்தால், உங்கள் உடல் குளிர்ச்சியடையும். தசை வலி குறையும். இரவில் நன்றாகத் தூங்குவீர்கள். தோல் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு அரிப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share