முட்டாள்தனத்தினாலேயே பெரும்பான்மை… சிந்தனை செல்வனின் பதிவு என்ன சொல்கிறது?

Published On:

| By Kavi

”பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்” என ஆண்டன் செக்கோவ் எழுத்துகளை குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன்.

இதுகுறித்து அவர், ”தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?” என்று கேட்டபோது, புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவ் இப்படி விளக்கினார்.

ADVERTISEMENT

தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாகச் சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள்..

சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக, தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும்.

ADVERTISEMENT

அங்கே பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்.

எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்வான சிந்தனைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவையாகத் தள்ளி வைக்கப்படுகின்றனவோ எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்..

ADVERTISEMENT

— ஆண்டன் செக்கோவ் (Anton Chekhov)” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு கீழே, ’தமிழ்நாட்டின் தற்போதைய நிலை குறித்துத்தான் நீங்கள் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன்’ , ’இந்த கருத்துக்கள் தமிழ்நாட்டுக்கு தற்போது கனகச்சிதமாக பொருந்துகிறது’ , ’இப்பொழுதெல்லாம் உங்களது பதிவுகள் உள் அர்த்தங்களோடு காணக்கிடைக்கின்றன’ , ’கூட்டணியில் இருந்தாலும் பளிச்சென்று பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி அண்ணா’ என்று பல்வேறு கமெண்டுகள் பதிவிடப்பட்டுள்ளன.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share