தமிழகத்தில் 1.79 கோடி முட்டாள்கள்.. விஜய் அரசை சாடிய திமுக முன்னாள் அமைச்சர் காந்தி

Published On:

| By Mathi

DMK Ex Minister Gandhi Slams Voters

தமிழகத்தில் 1.79 கோடி முட்டாள்கள் வாக்களித்து தவெகவை ஆட்சியில் அமர்த்தி உள்ளனர் என திமுக முன்னாள் அமைச்சர் காந்தி சாடி உள்ளார்.

காஞ்சிபுரத்தில் இன்று (செப்டம்பர் 5) செய்தியாளர்களிடம் காந்தி பேசியதாவது: முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் ரெய்டு நடைபெற்றது. சட்டசபையில் தினமும் பார்க்கிறீங்க. அது சட்டசபையா அது? கே.என்.நேரு கொஞ்ச நேரம் எதிர்த்து எதிர்த்து கேள்வி கேட்கிறார். அதனால் கே.என்.நேருவை அச்சுறுத்தலாம் என நினைத்து இந்த ரெய்டு நடைபெற்றிருக்கலாம்.

ADVERTISEMENT

இப்ப தமிழ்நாட்டோட நிலைமை என்ன? இப்ப இருக்கிற ஆட்சியில எதை எடுத்தாலும், ரீல்ஸ்தான். அதுதான் ஓடிக்கிட்டு இருக்கு. ராணிப்பேட்டையில ஜேகே டயர் என ஒரு நிறுவனமே இல்லை. ஆனால் அமைச்சர்கள் அப்படி ஒரு இல்லாத நிறுவனத்தை பற்றி பதில் சொல்கின்றனர்.

தமிழ்நாட்டில் ஒரு கோடியே 79 லட்சம் பேர் முட்டாள்கள் இருக்கின்றனர். 34 சதவீதம் முட்டாள்கள் வாக்களித்ததால்தான் இந்த ஆட்சி அமைந்துள்ளது.

ADVERTISEMENT

எங்கள் தளபதி.. நான் சொல்றது தளபதி ஸ்டாலினை.. ரீல்ஸ் தளபதியை அல்ல. கொரோனா காலத்தை எங்களது திமுக ஆட்சி சிறப்பாக எதிர்கொண்டது. இந்த ஆட்சி அத்தனையையும் பெயர் மாற்றம் மட்டும் செய்கிறது. அவ்வளவுதான். எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இவ்வாறு முன்னாள் அமைச்சர் காந்தி கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share