நீங்கள் சாப்பிடும் தர்பூசணி பழம் பாதுகாப்பானதா?.. கண்டுபிடிக்க ஈஸி டிப்ஸ் இதோ..!

Published On:

| By Santhosh Raj Saravanan

simple tests to check if watermelon is safe to eat

தர்பூசணி பழம் சாப்பிடுவதற்கு முன்பு அது பாதுகாப்பானதா என்பதை சரிபார்க்க சில எளிய சோதனைகளை உங்களுக்கு சொல்கிறது.

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், நீர்ச்சத்து நிறைந்த பழங்களை மக்கள் நாடுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக தர்பூசணி பழம் மக்களால் பெரும்பாலும் விரும்பக்கூடியதாக உள்ளது. மற்ற பழங்களைக் காட்டிலும் விலை குறைவு என்பதோடு மக்கள், வெப்பத்தை தணிக்கவும் உதவுகிறது. குறிப்பாக கோடைக்காலத்தில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை தடுப்பதில் தர்பூசணி முக்கிய பங்கு வகிக்கிறது.

ADVERTISEMENT

தர்பூசணி பழம் தற்போது பெரும்பாலும் கடைகள், சந்தைகளில் இருந்து வாங்கி வந்து சாப்பிடுகிறோம். ஆனால், சந்தையில் கிடைக்கும் தர்பூசணி பழம் எவ்வளவு பாதுகாப்பானது என்பது நமக்கு தெரியாது. ஏனெனில் சில இடங்களில் விரைவாக பழமாக மாற வேண்டும் என்பதற்காக ரசாயனத்தை (artificially ripened watermelon) பயன்படுத்தி பழுக்க வைத்திருக்கலாம். அதுபோலவே தர்பூசணி சிவப்பு நிறமாக மாறவும் ரசானயத்தை சேர்க்கலாம் என்ற அச்சம் உள்ளது.

ரசானயம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனைகள் முதல் உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, ஒரு தர்பூசணி பாதுகாப்பானது என சில வீட்டு பரிசோதனைகள் மூலமாக கண்டுபிடித்துவிடலாம். அவற்றை பட்டியலிட்டுள்ளோம்.

ADVERTISEMENT
தண்ணீர் சோதனை

ஒரு சிறிய தர்பூசணி துண்டை வெட்டி அதனை தண்ணீர் (watermelon Water test) உள்ள ஒரு பாத்திரத்தில் போட வேண்டும். தண்ணீர் விரைவாக சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாக மாறினால் அதில் செயற்கை நிறமிகள் இருக்க வாய்ப்புள்ளது. இயற்கையான தர்பூசணி என்பது தண்ணீரின் நிறத்தை மாற்றாது.

பஞ்சு மூலம் சோதனை

ஒரு தர்பூசணி பழத்தை வெட்டிய பிறகு அதன் சதையில் ஒரு சிறிய பஞ்சு துண்டை (Cotton test) மெதுவாக தேய்க்க வேண்டும். பஞ்சு எளிதாக சிவப்பு நிறத்தை உறிஞ்சினால் அதில் செயற்கையாக சாயம் சேர்க்கப்பட்டு இருக்கலாம் என யூகித்துக்கொள்ளலாம். இயற்கையான தர்பூசணியில் அப்படி செய்யும்போது அடர்த்தியான சிவப்பு நிறக் கறைகள் படியாது.

ADVERTISEMENT
விரிசல்கள் உள்ளதா என சரிபார்க்கலாம்

தர்பூசணியின் உட்புறத்தை உண்ணிப்பாக கவனிக்க வேண்டும். பழத்தில் பெரிய விரிசல்கள், வழக்கத்திற்கு மாறான வெள்ளைத் துகள்கள் போன்ற படிவங்கள் இருந்தால் அது ரசாயனம் (Check for cracks or residue in watermelon) சேர்க்கப்பட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம். செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களில் இதுபோன்ற குறைகள் இருக்கும்.

ஊசி செலுத்தப்பட்டதா என பரிசோதனை செய்யுங்கள்

தர்பூசணி பழத்தின் வெளித்தோலை கவனமாக பரிசோதனை செய்ய வேண்டும். அதில் உள்ள சிறிய துளைகள் அல்லது குத்து தடயங்கள், நிறத்தை அல்லது சுவையை அதிகரிக்க ரசாயனங்கள் (Look for injection marks) செலுத்தப்பட்டு இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. ஆகவே, இதுபோன்ற பழங்களை தவிர்த்துவிட்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share