பழனியில் பக்தர்களை அதிர வைத்த முருகன் கோவில் விடுதி கட்டணங்கள்- எவ்வளவு உயர்வு தெரியுமா?

Published On:

| By Mathi

Shocking Hike in Room Tariffs for Devotees in Palani

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் (Palani) நிர்வாகத்துக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளின் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக, கோயில் நிர்வாகத்தால் பல விடுதிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. முன்பு இந்த விடுதிகளில் வசதிகளைப் பொறுத்து ரூ.300 முதல் ரூ.2,500 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

ADVERTISEMENT

தற்போது, இந்த விடுதிகளின் கட்டணம் 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு, புதிய கட்டணங்கள் 13.07.2026 முதல் அமலுக்கு வந்துள்ளன.

பழைய மற்றும் புதிய கட்டணங்கள்

பொதுவான விடுதிகள் (வேலவன், குறிஞ்சி, கார்த்திகேயன் போன்றவை): முந்தைய கட்டணம் ரூ.300-ஆக இருந்த நிலையில், தற்போது அது ரூ.600-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குகன் இல்லம் (குளிர்சாதன வசதி): முந்தைய கட்டணம் ரூ.2,000-ஆக இருந்த நிலையில், தற்போது அது ரூ.3,000 + 5% GST என உயர்த்தப்பட்டுள்ளது.

இராஜ அலங்காரம் (குளிர்சாதன வசதி): முந்தைய கட்டணம் ரூ.2,625-ஆக இருந்த நிலையில், தற்போது அது ரூ.4,000 + 5% GST என உயர்த்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பழைய, புதிய கட்டண விவரம்

  • இராஜ அலங்காரம் (A/c): பழைய கட்டணம் ரூ. 2,500; புதிய கட்டணம் ரூ. 4,000 + 5% GST.
  • வள்ளி, தெய்வானை (A/c): பழைய கட்டணம் ரூ. 2,000; புதிய கட்டணம் ரூ. 3,000 + 5% GST.
  • குகன் இல்லம் (A/c): பழைய கட்டணம் ரூ. 2,000; புதிய கட்டணம் ரூ. 3,000 + 5% GST.
  • கதிர் வேலகம் (A/c): பழைய கட்டணம் ரூ. 1,500; புதிய கட்டணம் ரூ. 2,000 + 5% GST.
  • சின்னக்குமார் விடுதி (A/c): பழைய கட்டணம் ரூ. 500 / 900; புதிய கட்டணம் ரூ. 1,500 + 5% GST.
  • சண்முகர் இல்லம் (A/c): பழைய கட்டணம் ரூ. 1,000; புதிய கட்டணம் ரூ. 1,500 + 5% GST.
  • வடிவேலகம் (A/c): பழைய கட்டணம் ரூ. 750 / 1,000; புதிய கட்டணம் ரூ. 1,000 / 1,500 + 5% GST.
  • கார்த்திகேயன் விடுதி (Non A/c): பழைய கட்டணம் ரூ. 300; புதிய கட்டணம் ரூ. 600.
  • வேலவன் விடுதி (Non A/c): பழைய கட்டணம் ரூ. 300 / 700; புதிய கட்டணம் ரூ. 600 / 1,000 + 5% GST.
  • குறிஞ்சி விடுதி (Non A/c): புதிய கட்டணம் ரூ. 600.

இந்த கட்டண உயர்வுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share