சங்கர் ஜிவால் ஐபிஎஸ் ராஜினாமா!

Published On:

| By Kavi

சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தீயணைப்பு ஆணையத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

35 ஆண்டுகளுக்கும் மேலாக காவல்துறையில் பணி அனுபவம் கொண்ட சங்கர் ஜிவால் ஐபிஎஸ் 2023ஆம் ஆண்டு தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இவரது பதவிகாலம் கடந்த 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

ADVERTISEMENT

எனினும் ஓய்வு பெறுவதற்கு இரு தினங்களுக்குமுன்பே அப்போதைய திமுக அரசு இவருக்கு புதிய பொறுப்பை வழங்கியது.

அதாவது, காவல் துறை ஆணையம் போல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு புதிய ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

கடந்த 2025 செப்டம்பர் மாதம் புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட சங்கர் ஜிவால், 10 மாதங்கள் அந்த பொறுப்பை வகித்த நிலையில், இன்று ராஜினாமா செய்துள்ளார்.

அவருடன் ஆணையத்தின் உறுப்பினர்களாக செயல்பட்ட சத்தியமூர்த்தி, நமச்சிவாயம், இக்ராம் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர்.

ADVERTISEMENT

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share