சக்திகாந்த தாஸுக்கு மோடி கொடுத்த பரிசு!

Published On:

| By Selvam

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ், பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக இன்று (பிப்ரவரி 22) நியமிக்கப்பட்டுள்ளார். Shaktikanta Das appointed Secretary

இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் பயிற்சித் துறை (DoPT) இன்று பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி, பிரதமர் பதவிக்காலம் முடியும் வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை சக்திகாந்த தாஸ், பிரதமரின் இரண்டாம் முதன்மை செயலாளராக இருப்பார்.

ADVERTISEMENT

சக்தி காந்த தாஸ், 1980-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடரை சேர்ந்த ஐஏஎஸ் ஆவார். 2018-ஆம் ஆண்டு இவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்றார். இந்தநிலையில், கடந்த ஆண்டு இவர் அந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் ஆறு ஆண்டுகள் இருந்தபோது, கோவிட் 19 தொற்று, ரஷ்யா – உக்ரைன் போர் உள்ளிட்ட பல பொருளாதார சவால்களை எதிர்கொண்டார்.

ADVERTISEMENT

சக்திகாந்த தாஸின் நியமனத்தை விமர்சித்து கேரள காங்கிரஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “மோடிக்கு எப்போதும் தனது விசுவாசமான ஊழியர்கள் தேவை. நேரான முதுகெலும்பு உள்ள யாருடனும் அவரால் பணியாற்ற முடியாது. மோடிக்கு விசுவாசமான ஊழியர்கள் ஒருபோதும் ஓய்வு பெறுவதில்லை” என்று தெரிவித்துள்ளார். Shaktikanta Das appointed Secretary

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share