தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் (SETC) நீண்ட தூரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரூ.10-க்கு “பயணி” (Payani) குடிநீர் பாட்டில் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகமான பல்லவன் இல்லத்தில் நேற்று ஆகஸ்ட் 7-ந் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கடந்த 2013-ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது பேருந்து நிலையங்களில், அரசு பேருந்துகளில் ரூ10- க்கு “அம்மா குடிநீர்” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது இத்திட்டம். 2016-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த திட்டம் தொய்வடைந்தது. 2020 கொரோனா கால கட்டத்தில் இத்திட்டம் முழுமையாக நிறுத்தப்பட்டது.
தற்போது நீண்ட தூர பேருந்து பயணிகளுக்கு மீண்டும் ரூ10-க்கு ”பயணி” குடிநீர் பாட்டில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
