மதிமுகவின் மூத்த தலைவர்களாக இருந்த டிஆர்ஆர் செங்குட்டுவன், பொடா அழகு சுந்தரம், சிவந்தியப்பன் உட்பட 150-க்கும் மேற்பட்ட அக்கட்சியின் முன்னாள் நிர்வாகிகள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஜூன் 28) திமுகவில் இணைந்தனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்படுவதற்கு 2022-ல் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வைகோவுக்கு எதிராக திருப்பூர் துரைசாமி, டிஆர்ஆர் செங்குட்டுவன், சிவந்தியப்பன், அழகுசுந்தரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அப்போது போர்க்கொடி தூக்கினர். இதனால் இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார் வைகோ.
இதேபோல மதிமுகவில் அதிருப்தி தெரிவித்து வெளியேறிய பலரும் திமுகவில் இணைய முயன்றனர். ஆனால் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக இருந்ததால் அக்கட்சியின் அதிருப்தியாளர்களை திமுக தலைவர் ஸ்டாலின் சேர்க்கவில்லை.
இந்த நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில், திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றபப்ட்டது.

இந்த பின்னணியில் மதிமுகவின் மூத்த தலைவர்களாக இருந்த டிஆர்ஆர் செங்குட்டுவன், அழகு சுந்தரம், சிவந்தியப்பன் உள்ளிட்டோர் திமுகவில் இன்று இணைந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தனர்.
பொடா தியாக வேங்கைகள்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், 2002-ம் ஆண்டு நடந்த பொதுக் கூட்டத்தில், “தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு” ஆதரவாக பேசியதாக வைகோ, அழகு சுந்தரம், சிவந்தியப்பன் உள்ளிட்டோர், அடக்குமுறை சட்டங்களில் ஒன்றான “பொடா” சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தனர்.
வைகோவுடன் சிறைவாசம் அனுபவித்த அழகு சுந்தரம், சிவந்தியப்பன் உள்ளிட்டோர், “தியாக வேங்கைகள்” என வைகோவால் பெருமிதத்துடன் அழைக்கப்பட்டனர்.
தற்போது அந்த பொடா தியாக வேங்கைகள் அழகு சுந்தரம், சிவந்தியப்பன் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர்.
திமுகவில் இணைந்தவர்கள் யார் யார்?
மதிமுக முன்னாள் நிர்வாகிகளான
- சிவகங்கை மாவட்டச் செயலாளரும் – உயர்நிலைக்குழு உறுப்பினருமான புலவர் செ.செவந்தியப்பன்
- திருவள்ளூர் மாவட்டச் செயலாளரும் – உயர்நிலைக்குழு உறுப்பினருமான டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன்
- கொள்கை பரப்பு செயலாளரும் – உயர்நிலைக்குழு உறுப்பினருமான திருப்பரங்குன்றம் பொடா அழகுசுந்தரம்
- விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.எஸ்.சேகர்
- மாநில தேர்தல் பணி துணைச் செயலாளர் தஞ்சாவூர் விடுதலைவேந்தன்
- தலைமைச் செயற்குகுழு முன்னாள் உறுப்பினர் டி.ஆர்.ஆர்.மதியழகன்;
- திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளான மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஆர்.எஸ்.கோவிந்தராஜன்
- மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ம.ராஜகோபால்
- சாமளாபுரம் பேரூர்ச் செயலாளர் எஸ்.செல்வராஜ்
- மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும் பல்லடம் நகர்மன்ற துணைத் தலைவருமான திருமதி நர்மதா இளங்கோவன்
- பொதுக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், சாமிநாதன்
- மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கார்த்திக்
- பல்லடம் நகர துணைச் செயலாளர் ஜெகநாதன்
- பல்லடம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் வெங்கடேஷ்
- முன்னாள் நிர்வாகிகளான மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் புதுக்கோட்டை சதாசிவம்
- மாநில மாணவர் அணி துணைச் செயலாளர்கள் சிவகாசி மு.செல்வராஜ்
- திருப்பூர் ஆர்.எஸ்.கோவிந்தராஜன்
- நகரச் செயலாளர் எஸ்.கே.ரவிச்சந்திரன்
- ஆர்.எம்.எஸ்.சேகர்
- விருதுநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி வழக்கறிஞர் பாரதமணி
- மதுரை மாவட்ட பொறியாளர் அணி சி.எல்.ராஜா
- சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளான மாவட்ட அவைத்தலைவர் எம்.ஜெயபிரகாஷ்
- பொதுக்குழு உறுப்பினர்களான என்.ராமச்சந்திரன்
ஏ.சி.முத்து - பி.சதாசிவம்
- இளைஞர் அணி வி.அருள்செல்வம்
- பி.கந்தசாமி
- திருவள்ளூ மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட பொறியாளர் அணி கே.ரகுராமகிருஷ்ணன்
- பொன்னேரி பேரூர்ச் செயலாளர் மதிவாணன்
- மோகன், ஞானவேல்
- கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஆகாஷ்ராஜ்
- பொடா அழகுசுந்தரம் ஏற்பாட்டில் சென்னை அம்பேத்கார் சட்டப் பல்கலைக் கழக மாணவர்கள் ஏ.அன்பரசன் தலைமையில் 40 பேர் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கே.கலைவாணன், எம்.எல்.ஏ., திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர், மகளிர் அணி தலைவர் விஜயாதாயன்பன், பல்லடம் முத்துரத்தினம், தாராபுரம் கவின்நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
