தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் : வெளியான முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Kavi

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 25-ம் தேதியே ஊதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

வங்கி ஊழியர்கள் 28ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். வங்கிகள் கூட்டமைப்பான UFBU (United Forum of Bank Unions) சார்பில் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

செப்டம்பர் 26 (2-வது சனிக்கிழமை) மற்றும் செப்டம்பர் 27 (ஞாயிறு) விடுமுறை என்பதால், தொடர்ந்து 5 நாட்கள் வங்கி சேவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

இதனால் வரும் ஞாயிறு கிழமை வங்கிகள் செயல்படும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT

செப்டம்பர் 2026 மாத சம்பளம் மற்றும் ஊதியத்தை செப்டம்பர் 25-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வழங்க  மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில் நாளையே தமிழக அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படவுள்ளது. 

ADVERTISEMENT

இதுகுறித்து கருவூலக் கணக்கு இயக்குநர்  வெளியிட்ட அறிவிப்பில் தி.சாருஸ்ரீ,  ”இம்மாதம் 28.09.2026 முதல் 30.09.2026 வரை தேசிய அளவிலான வங்கி வேலை நிறுத்தத்தினால் இம்மாதத்திற்கான அனைத்து மாதந்திர ஊதியம்/தினக்கூலி ஓய்வூதியப் பட்டியல்களை இம்மாத இறுதி நாளான 30.09.2026 அன்று அல்லாமல் முன்கூட்டியே 25.09.2026 அன்று அனைத்து சம்பளம் / தினக்கூலி/ஓய்வூதியப் பட்டியல்களுக்கான மின்னணு தீர்வு வழங்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இதுதொடர்பாக அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் பட்டியல்களை முன்கூட்டியே சமர்ப்பிக்க அறிவுரை வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share