நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்ட தனி போர்டுடன் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகும்படி நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் கதவில் சம்மன் ஒட்டப்பட்டது. அதில், பிப்ரவரி 28-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு ஆஜராகத் தவறினால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.seperate place for summon in home
ஆனால் சம்மன் ஒட்டப்பட்ட சில நிமிடங்களில் போலீசார் கண்முன்னே சம்மன் கிழிக்கப்பட்டது. உயரதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு இதுதொடர்பாக விசாரிக்க நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன்ராஜேஷ் மற்றும் போலீஸார் சீமான் வீட்டுக்குள் சென்றனர். ஆனால் அங்கே சீமான் வீட்டு பாதுகாவலராகப் பணியாற்றி வரும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அமல்ராஜ், போலீஸாரை வீட்டின் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். அப்போது, இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.seperate place for summon in home
இதனையடுத்து மோதலில் ஈடுபட்ட அமல்ராஜை கைது செய்த போலீசார், நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவரிடமிருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். சம்மனை கிழித்ததாக சீமான் வீட்டு டிரைவர் சுபாகரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீமானுக்கு வேறொரு வழக்கில் சம்மன் வழங்க இன்று ஈரோடு போலீசார் சென்னை வந்துள்ளனர். ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது வெடிகுண்டு வீசுவேன் என சீமான் பேசியது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் வழங்கப்பட உள்ளது.seperate place for summon in home
இந்த நிலையில், சீமான் வீட்டு முன்பாக அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், “சம்மனை ஒட்டி சார்வு செய்ய விரும்பும் காவல் அதிகாரிகள் இங்கே ஒட்டிச் செல்லவும்” என எழுதப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சீமானின் மனைவி கயல்விழி கூறுகையில், ‘ நாங்கள் அனைத்துக்கும் துணிந்து தான் இருக்கிறோம். ஆய்வாளர் பிரவீன் வேண்டுமென்றே செய்துள்ளார். வீட்டில் இருப்பவர்களை கைது செய்து மனதளவில் தொந்தரவு கொடுக்கிறார்கள். நேர்மையான ஒரு தலைவர் சீமான். எங்களுக்கு பயம் எல்லாம் கிடையாது. சம்மனை கிழித்த எனது தம்பியை கைது செய்தே ஆவேன் என்றார். இல்லையெனில் படையை இறக்குவேன் என்று சொன்னார். எங்கள் வீட்டின் மீது கல் எறிந்த போது போலீசார் என்ன செய்தனர்? ‘ என்று கேள்வி எழுப்பினார்.
‘ ஒரு நடிகையை வைத்து சீமானை முடக்க முடிவு செய்துள்ளனர். இதுவெல்லாம் எங்களிடத்தில் நடக்காது. போலீசாரின் ஈகோவால்தான் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது’ என்றும் கயல்விழி கூறியுள்ளார்.