திருவள்ளூரில் சோகம்.. பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி

Published On:

| By Pandeeswari Gurusamy

திருவள்ளூரில் கொண்டாபுரம் அரசு உயர் நிலைப் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து 7ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ஆர்.கே. பேட்டை தாலுகா கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மோகித் என்ற மாணவன் 7ம் வகுப்பு படித்து வந்து வந்தார்.

ADVERTISEMENT

இன்று (டிசம்பர் 16) நடைமேடையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பக்கவாட்டு சுவர் இடிந்தது. இந்த சம்பவத்தில் மாணவன் மோகித் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து மாணவனின் தந்தை சரத்குமார் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

சம்பந்தப்பட்ட பள்ளியின் சுற்றுச் சுவர் சேதமடைந்திருந்த நிலையில் அதை புதிதாகக் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.

ஆனால், மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வித்துறையும் எந்த அக்கறையும் காட்டாததன் விளைவே மாணவன் உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share