தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தனக்கென ஒரு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை சமந்தா. 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா 2021 ஆம் ஆண்டு நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்றார். திருமண விவாகரத்திற்கு பின் பல படங்களில் பிசியாக நடிக்க தொடங்கிய சமந்தாவிற்கு சில படங்கள் பெரிய வெற்றியையும் பெற்று தந்தது.
ஆனால் திடீரென மயோசிடிஸ் என்ற அரிய நோயால் நடிகை சமந்தா பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தகவல் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
அதனை தொடர்ந்து ஓரளவு குணமாகி மீண்டு வந்த சமந்தா, யசோதா, சகுந்தலா, குஷி ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 28) சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
ட்ரலாலா மூவிங் பிக்டர்ஸ் தயாரிப்பில் “மா இண்டி பங்காரம்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள தெலுங்கு படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார்.
இந்த படம் குறித்து நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “மின்னுவது எல்லாம் பொன்னல்ல” என்ற வரிகளை பதிவிட்டு, இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில், சமந்தா துப்பாக்கியுடன் செம மாஸாக போஸ் கொடுக்க அவரது பின்னால் ஒரு டெடி பேர் பொம்மை மற்றும் குக்கர் வெடித்து சிதறுவது போல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இப்படத்தின் இயக்குநர், சக நடிகர்களை பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மே 10-ல் தொடங்கும் 126-வது மலர்க்காட்சிக்குத் தயாராகும் உதகை!
மோடி சந்திப்பு ரத்து… சீனா செல்லும் எலான் மஸ்க் : எதற்காக?