மதுரை சித்திரைத் திருவிழா-பட்டாசுக்கு தடை

Published On:

| By Balaji

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள புட்டிங்கல் கோயில் திருவிழாவில் சமீபத்தில் பட்டாசு வெடிவிபத்தில் 114 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரைத் திருவிழாவின்போது பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சித்திரைத் திருவிழாவின்போது மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி உள்ள நான்கு மாசி வீதிகளிலும் அம்மன் ஊர்வலமாக வரும்போது பட்டாசு வெடிக்கப்படும். இதேபோல் பல்லாயிரக்கணக்கான பேர் கலந்துகொள்ளும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழாவின்போதும் பட்டாசு வெடிக்கப்படும். கேரள வெடி விபத்தைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சித்திரைத் திருவிழாவிலும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share