ADVERTISEMENT

ரூ.700 கோடி ஊழல்: அமைச்சர் பிரபுவிடம் அறப்போர் இயக்கம் புகார்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது. இதில் கனிமவளத் துறை அமைச்சராக டி.கே பிரபு செயல்பட்டு வருகிறார். 

இந்நிலையில் தென்மாவட்டங்களில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 20க்கும் மேற்பட்ட கல்குவாரிகளை தற்காலிகமாக மூட உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்தார் அமைச்சர் பிரபு. 

ADVERTISEMENT

இந்தசூழலில் ஊழல்களுக்கு எதிராக வழக்குகளை தொடுத்து வரும் அறப்போர் இயக்கத்தினர், இன்று தலைமை செயலகத்தில் அமைச்சர் பிரபுவை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். 

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கொடுத்த அந்த மனுவில், 

ADVERTISEMENT

“அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையிலும் அரசாங்கத்திலும் 2024 ஆம் ஆண்டு கொடுத்த திமுக அரசின் ரூபாய் 700 கோடி திருநெல்வேலி கல்குவாரி ஊழல் மீது கிரிமினல் நடவடிக்கையும், கனிமவள இழப்பை மீட்கும் அபராத நடவடிக்கையும் உடனடியாக எடுக்க வேண்டும். அறப்போர் புகாரில் FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.

கடந்த ஆட்சியில் ஜனவரி 2026 இல் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட GO(Ms) No 2026 One Time Regulairization scheme அரசாணையை புதிய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். திரும்ப பெறுவதன் மூலம் 20,000 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு ஏற்பட இருக்கும் வருமான இழப்பு தடுக்கப்படும்.

ADVERTISEMENT

புதிய ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல் குவாரிகளையும் சர்வே எடுத்து, விதிமீறும் கல்குவாரிகள் அனைத்தும் சட்டப்படி மூடப்பட்டு, இழந்த பணத்தை மீட்டெடுத்து, அரசின் வருமானத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய குவாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊழல் பொது ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு கல்குவாரி அனுமதி சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் வெளிப்படையாக மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். இ பாஸ் என்ற பெயரிலே நடந்து வரும் மோசடி பாஸ் முறையை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். எடை மேடை மற்றும் செக் போஸ்ட்களில் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு மெட்ரிக் டன்னும் மொத்த அனுமதியில் கழியும்படி உண்மையான இ-பாஸ் முறை கொண்டுவரப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share