Ballon d’Or விருது பட்டியலில் முதன்முறையாக இடம்பெறாத ரொனால்டோ

Published On:

| By christopher

Ronaldo ruled out for Ballon d’Or first time in 20 years

பாலன் டி ஒர் (Ballon d’Or) விருது இறுதிப்பட்டியலில் கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக  ரொனால்டோ பெயர் இடம்பெறாதது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆண்டுதோறும் கால்பந்து உலகில் மிகச்சிறந்த வீரருக்கு ‘பாலன் டி ஒர்’ (Ballon d’Or) விருதை பிஃபா வழங்கி வருகிறது.

1956ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருதினை வரலாற்றில் பல்வேறு வீரர்கள் பெற்றுள்ளனர். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக இந்த விருதை பெற கால்பந்து விளையாட்டில் இன்று வரையிலும் தங்களை ஆதிக்கத்தை செலுத்தி, தலைசிறந்த வீரர்களாக கருதப்படும் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி மற்றும் போர்ச்சுக்கலின் ரொனோல்டோவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்த விருதுக்கான இறுதிப்பட்டியலில் இவர்கள் இருவரே முதல் இரண்டு இடங்களை பிடித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு பாலன் டி ஒர் விருது பெறப்போகும் 30 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அடங்கிய இறுதிப்பட்டியல் இன்று (செப்டம்பர் 7) அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், உலகக்கோப்பையை வென்ற மெஸ்ஸி, பிரான்ஸ் அணி கேப்டன் எம்பாப்வே அகியோரின் பெயர் இடம்பெற்றுள்ள நிலையில்,  இந்த விருதை 5 முறை வென்றுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயர் இடம்பெறவில்லை.

கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ரொனோல்டோவின் பெயர் பாலன் டி ஒர் விருதுக்கு பரிந்துரைக்கப்படவில்லை. இது அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெண்களுக்கான இறுதிப்பட்டியலில், கடந்த மாதம் ஸ்பெயின் உலகக் கோப்பையை வெல்ல உதவிய ஐடானா பொன்மதி, செல்சி அணி வீராங்கனைகளான சாம் கெர் மற்றும் மில்லி பிரைட் உள்ளிட்ட 30 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அதே நேரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெண்களுக்கான விருதை வென்ற பார்சிலோனாவின் அலெக்ஸியா புட்டெல்லாஸ் இந்தாண்டு பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படும் பாலன் டி ஒர் விருது வழங்கும் விழா வரும் அக்டோபர் 30-ம் தேதி பாரிஸில் நடைபெற உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

‘பாரத்’ பெயருக்கு ஆதரவா?: வடிவேலு ரியாக்சன்!

விவசாயிகளின் விளைபொருட்களின் விற்பனைக்கு இ-நாம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share