‘பாரத்’ பெயருக்கு ஆதரவா?: வடிவேலு ரியாக்சன்!

Published On:

| By christopher

vadivelu reaction over bharat name

இந்தியா முழுவதும் பாரத் என்கிற பெயர் பற்றிய விவாதம் தீவிரமடைந்து வருகிறது. திரைப் பிரபலங்கள் இது சம்பந்தமாக என்ன கருத்து சொல்லப்போகிறார்கள் என்பதை அரசியல்வாதிகளும், பொது சமூகமும் உற்று நோக்கி வருகின்றனர்.

இந்தியாவின் பெயர் மாற்றத்திற்கு நடிகர் விஷால், இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பாரத் பெயருக்கு பாஜக ஆதரவாளரும், இந்தி நடிகையுமான கங்கணா ரணாவத் ஆதரித்து கருத்து வெளியிட்டு இருந்தார்.

இந்தநிலையில் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை சென்ற நடிகர் வடிவேலு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது “சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினி நடித்திருந்தார். இப்போது இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார். ரொம்பவும் சுவாரஸ்யமாக வந்திருக்கிறது. முதல் பாகம் போன்று சந்திரமுகி – 2 ல் முருகேசன் என்னும் கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன். இதுவரை  காமெடி படங்களில் நடித்துள்ளேன். மாமன்னன் மூலம் குணசித்திர கதாபாத்திரத்தில் நடிக்க  முடியும் என்று  நிரூபித்து இருக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து அவரிடம், ‘இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றினால் ஆதரவு கொடுப்பீர்களா?’ என்ற கேள்விக்கு “நான் அந்த அரசியலுக்கே போகவில்லை. அப்படி போகும்போது சொல்கிறேன்” என்று கூறினார்.

மறுபடியும் அதுகுறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், ’திரும்ப திரும்ப பேசுற நீ’ என்று அவரது பாணியிலேயே பதில் கூறினார்.

தொடர்ந்து சனாதனம் குறித்து கேள்வி எழுப்பியவுடன், ’வரட்டா’ என்று கூறியபடி அங்கிருந்து வடிவேலு நகர்ந்து சென்றார்.

இராமானுஜம்

விவசாயிகளின் விளைபொருட்களின் விற்பனைக்கு இ-நாம்!

இந்த தீபாவளிக்காவது போனஸ் கிடைக்குமா? – டாஸ்மாக் பணியாளர்கள்!

உணர்வு இருக்கும் அனைவரும் உதயநிதியுடன் நிற்க வேண்டும்: வெற்றிமாறன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel