குடித்து விட்டு தெருவில் உறங்குகிறீர்களா? மோதிரம் மாட்டிய பின்னணி!

Published On:

| By Kumaresan M

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் காங்கநாடு பகுதியை சேர்ந்த 46 வயதான ஒருவர் அதிகமான மது போதையில் அடிக்கடி சாலையில் அலங்கோலமாக படுத்து கிடப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.

இதை பார்த்த வில்லங்க ஆசாமி ஒருவர், பாடம் புகட்ட எத்தனித்துள்ளார். கடந்த 24 ஆம் தேதி அதே போல அலங்கோலமாக தெருவில் அந்த மனிதர் கிடந்துள்ளார். இதையடுத்து, பாடம் புகட்ட நினைத்த மனிதர், போல்டு ஒன்றை கொண்டு வந்து குடித்துவிட்டு, படுத்து கிடந்தவரின் பிறப்புறுப்பில் மோதிரம் போல மாட்டி விட்டு எஸ்கேப் ஆகி விட்டார். remove nut stuck genitals

மது போதை தெளிந்து எழுந்த அந்த ஆசாமி சிறுநீர் கழிக்க முயற்சித்துள்ளார். அப்போதுதான், அந்த விபரீதத்தை பார்த்து அலறியுள்ளார். சிறுநீர் கழிக்க முடியாமல் துடித்து போனார். இதையடுத்து, காங்கநாடு மருத்துவமனைக்கு ஓடியுள்ளார். அங்கு, மருத்துவர்களிடம் காட்டி எப்படியாவது எடுத்து விடுங்க என்று கதறியுள்ளார்.

தொடர்ந்து, மருத்துவர்கள் போல்ட்டை அகற்ற முயன்றும் முடியவில்லை. இரு நாட்களாக மருத்துவர்கள் போராடி பார்த்தும் பலன் கிடைக்கவில்லை . இந்த இரு நாட்களிலும் அவரால் சிறுநீர் கழிக்க முடியாமலும், வலியிலும் துடித்து போனார். remove nut stuck genitals

இறுதியில் போல்ட்டை அகற்றும் பொறுப்பை காங்கநாடு தீயணைப்புத்துறையினரிடத்தில் மருத்துவர்கள் ஒப்படைத்தனர். தீயணைப்பு அலுவலர் ஷிஜூ தலைமையில் 4 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் போல்ட்டை அகற்ற முயற்சித்தனர். கடைசியில் 90 நிமிட போராட்டத்துக்கு பிறகு போல்டு அகற்றப்பட்டது. அப்போதுதான், அந்த மனிதர் நிம்மதி பெற்று விட்டார்.

குடித்து விட்டு நம்ம ஊரிலும் தெருவில் உறங்குபவர்கள் ஏராளம் … ஜாக்கிரதை மக்களே!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share