ADVERTISEMENT

10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ‘காக்கிச் சட்டை’ கனவு: 25,487 காலியிடங்கள்… SSC வெளியிட்ட மெகா அறிவிப்பு!

Published On:

| By Santhosh Raj Saravanan

Registration for government vacancy jobs in SSC

சென்னை/புதுடெல்லி:

ADVERTISEMENT

“படித்து முடித்துவிட்டு ராணுவத்திலோ அல்லது துணை ராணுவப் படைகளிலோ சேர்ந்து நாட்டைக் காக்க வேண்டும்” என்ற லட்சியத்துடன் சுற்றும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPFs) காலியாக உள்ள கான்ஸ்டபிள் (General Duty) பணியிடங்களை நிரப்ப, மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (SSC) பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

மொத்தம் 25,487 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை (CISF), சிஆர்பிஎஃப் (CRPF) உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புப் படைகளில் இந்தப் பணிகள் நிரப்பப்பட உள்ளன.

தமிழில் தேர்வு எழுதலாம்!

ADVERTISEMENT

வழக்கமாக இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் இந்தத் தேர்வு, கடந்த முறை முதல் தமிழிலும் நடத்தப்படுகிறது. இது தமிழக மாணவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம். ஆங்கிலம் தெரியவில்லையே என்ற கவலையின்றி, தாய்மொழியிலேயே படித்துத் தேர்வெழுதலாம்.

காலியிடங்கள் விவரம்:

ADVERTISEMENT

எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை (CISF), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ITBP), சசாஸ்திர சீமா பல் (SSB), சிறப்புப் பாதுகாப்புப் படை (SSF), போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் (NCB) சிப்பாய் பணியிடங்கள்.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10-ம் வகுப்பு (SSLC/Matriculation) தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். (எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு).

சம்பளம்:

தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு, ஊதிய நிலை-3 (Pay Level-3) படி, மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதர படிகள் தனி.

தேர்வு முறை எப்படி?

கணினி வழித் தேர்வு (CBT): 80 கேள்விகள் கொண்ட இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

உடர்தகுதித் தேர்வு (PET/PST): குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓடுதல் மற்றும் உயரம், மார்பளவு சரிபார்த்தல்.

மருத்துவப் பரிசோதனை (Medical Exam).

விண்ணப்பிப்பது எப்படி?

விருப்பமுள்ளவர்கள் ssc.gov.in என்ற புதிய இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பழைய இணையதளம் (ssc.nic.in) இப்போது பயன்பாட்டில் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்க.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 31.12.2025 (இரவு 11 மணிக்குள்).

ஆன்லைன் கட்டணம் செலுத்தக் கடைசி தேதி: 01.01.2026.

தேர்வு நடைபெறும் மாதம்: பிப்ரவரி – மார்ச் 2026.

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், குறிப்பாகக் கிராமப்புற மாணவர்கள் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, மத்திய அரசுப் வேலையில் சேரத் தயாராகுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share