அடுத்தடுத்து தோல்வி எதிரொலி : இன்ஸ்டாவிலும் சி.எஸ்.கே-வை விரட்டியடித்த ஆர்.சி.பி!

Published On:

| By christopher

rcb defeat csk in instagram too

இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரும் அணிகளில் ஒன்றாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்று (மார்ச் 31) முந்தியுள்ளது. rcb defeat csk in instagram too

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 17 ஐபிஎல் சீசன்கள் நடைபெற்றுள்ளன. அதில் சமூகவலைதளங்களில் அதிக ரசிகர்கள் பின் தொடரும் அணிகளாக பெங்களூரு, சென்னை, மும்பை அணிகள் உள்ளன.

இவற்றில் சென்னை, மும்பை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. ஆனால் ஒவ்வொரு முறையும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற சபதத்துடன் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு அணிக்கு கோப்பையை வெல்வது என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் அந்த அணியை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது பெங்களூர் அணியின் மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் அதிகம் பேர் பின்தொடரும் அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தற்போது உருவெடுத்துள்ளது.

17.7 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் சென்னை அணி முதலிடத்தில் இருந்த நிலையில், இன்று 17.8 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்று பெங்களூரு அணி முந்தியுள்ளது.

இதற்கு சென்னை அணியின் அடுத்தடுத்த தோல்வியும், பெங்களூரு அணியின் அபார ஆட்டமும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

தனது முதல் போட்டியில் மும்பை அணியை வென்ற சென்னை அணி, பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது.

அதேவேளையில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளை அவற்றின் சொந்த மைதானத்தில் அடுத்தடுத்து வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது பெங்களூரு.

இதனையடுத்து, பெங்களூரு அணியின் இந்த எழுச்சியானது, இந்தாண்டு கோப்பை வெல்லப் போவதற்கான அறிகுறி என்றும், கோப்பையை வென்றால் ஆர்.சி.பியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 20 மில்லியனை எட்டும் என்றும் அந்த அணியின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் ஐபிஎல் அணிகளை பின் தொடர்வோரின் எண்ணிக்கை விவரம்!

அணிகள் பின் தொடர்வோர் எண்ணிக்கை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு17.8 மில்லியன்
சென்னை சூப்பர் கிங்ஸ்17.7 மில்லியன்
மும்பை இந்தியன்ஸ் 16.2 மில்லியன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 மில்லியன்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 5.1 மில்லியன்
ராஜஸ்தான் ராயல்ஸ் 4.7 மில்லியன்
குஜராத் டைட்டன்ஸ் 4.5 மில்லியன்
டெல்லி கேபிடல்ஸ்4.3 மில்லியன்
பஞ்சாப் கிங்ஸ் 3.7 மில்லியன்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3.5 மில்லியன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share