ரிசர்வ் வங்கியில் வேலை: 10ஆம் வகுப்பு பாஸ் பண்ணி இருந்தா போதும்… 572 காலியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!

Published On:

| By Santhosh Raj Saravanan

rbi office attendant recruitment 2026 10th pass job notification

“பேங்க் வேலைன்னாலே டிகிரி முடிச்சிருக்கணும்… ஐபிபிஎஸ் எக்ஸாம் எழுதணும்னு பயப்படுறீங்களா?” அந்தக் கவலையைத் தூக்கிப் போடுங்க. வெறும் பத்தாம் வகுப்பு முடித்த கையோடு, இந்தியாவின் வங்கிகளுக்கெல்லாம் தலைமையான ‘ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா’வில் (RBI) நிரந்தர வேலை வாங்கும் வாய்ப்பு இதோ உங்களைத் தேடி வந்திருக்கு.

நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் காலியாக உள்ள ‘அலுவலக உதவியாளர்’ (Office Attendant) பணியிடங்களை நிரப்பப் புதிய அறிவிப்பு (2026) வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

காலியிடங்கள் எவ்வளவு? மொத்தம் 572 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை மண்டலத்திற்கும் கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. குரூப்-சி (Group C) வகையைச் சேர்ந்த இந்த வேலைக்கு, நாடு முழுவதும் போட்டி இருக்கும் என்றாலும், அந்தந்த மாநில மொழியைத் தெரிந்தவர்களுக்குத் தான் முன்னுரிமை. அதனால் தமிழக மாணவர்களுக்கு இது டபுள் ஜாக்பாட்!

கல்வித் தகுதி என்ன? இங்குதான் ஆர்பிஐ ஒரு பெரிய ‘செக்’ வைத்திருக்கிறது.

ADVERTISEMENT
  • படித்தது: 10ஆம் வகுப்பு (SSLC/Matriculation) தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
  • முக்கிய நிபந்தனை: “நான் டிகிரி முடிச்சிருக்கேன், பி.ஜி முடிச்சிருக்கேன்” என்று சொன்னால் இந்த வேலைக்கு நீங்கள் தகுதியற்றவர்! ஆம், பட்டதாரிகள் (Graduates) இதற்கு விண்ணப்பிக்க முடியாது. இது 10ஆம் வகுப்பு தகுதியில் உள்ளவர்களுக்கான பிரத்யேக வாய்ப்பு.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். (ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு உண்டு).

சம்பளம்: “பியூன் வேலைதானேனு சாதாரணமா நினைக்காதீங்க!”

ADVERTISEMENT

ஆர்பிஐ ஊழியர் என்பதால் அடிப்படைச் சம்பளம், அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி என எல்லாம் சேர்த்து மாதம் கையில் சுமார் ரூ.26,000 முதல் ரூ.30,000 வரை ஆரம்பச் சம்பளமே கிடைக்கும். தவிர, மருத்துவச் சலுகைகள், லோன் வசதிகள் தனி!

தேர்வு முறை:

  • ஆன்லைன் எழுத்துத் தேர்வு (90 நிமிடங்கள்).
  • மொழித் திறன் தேர்வு (LPT) – இதில் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

டிகிரி முடிச்சவங்க அப்ளை பண்ண முடியாதுங்கிறதுதான் இதுல இருக்குற பெரிய அட்வான்டேஜ். இன்ஜினியரிங் முடிச்சவங்க, எம்.பி.ஏ படிச்சவங்க போட்டியில இருக்க மாட்டாங்க. பிளஸ் 2 முடிச்சிட்டு வேலை தேடுறவங்களுக்கும், டிகிரி முடிக்காதவர்களுக்கும் இது ஒரு ‘லைஃப் செட்டில்’ ஆகுற வாய்ப்பு. சிலபஸ் ரொம்ப ஈஸி. கொஞ்சம் முயற்சி பண்ணா, ஆர்பிஐ ஐடி கார்டு உங்க கழுத்துல தொங்கும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share