ரேஷன் கார்டு eKYC இன்னும் முடிக்கலையா? இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்

Published On:

| By Mathi

Ration Card-Ekyc

தமிழகத்தில் ரேஷன் கார்டுகளில் இதுவரை கைரேகை பதிவு (eKYC) மேற்கொள்ளாதவர்கள் பயன்பெறும் வகையில், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இன்று (செப்டம்பர் 26) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன்படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு, கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் கைரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.57 சதவிகிதம் eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த eKYC பதிவினை 100 சதவிகிதம் நிறைவு செய்யும் பொருட்டு இன்று (செப்டம்பர் 26) தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் மட்டும் இந்த முகாமிலிருந்து தவிர்க்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

எனவே இதுவரை நியாய விலைக் கடைகள் மூலம் கைரேகைப் பதிவு (eKYC) மேற்கொள்ளாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் இன்று நடைபெறும் சிறப்பு முகாமைப் பயன்படுத்தி தங்களது கைரேகைப் பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share