சூர்யாவுக்கு பாராட்டு… ரெட்ரோ படம் பார்த்த ரஜினியின் ரியாக்சன் என்ன?

Published On:

| By christopher

rajini reaction after retro movie watching

அடுத்தடுத்த தோல்விகளால் பெரிய வெற்றியைக் காணாமல் காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு விருந்தாக கடந்த 1ஆம் தேதி வெளியானது ரெட்ரோ திரைப்படம். rajini reaction after retro movie watching

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா – பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான இப்படத்திற்கு முதல் காட்சிக்கு பிறகு கலவையான விமர்சனங்கள் வெளிவந்தன.

ADVERTISEMENT

எனினும் அடுத்தடுத்த காட்சிகளில் ரசிகர்களின் ஆதரவு பெருகி உலகம் முழுவதும் பல திரையரங்குகள் ஹவுல்புல் ஆனது.

இதனால் நடிகர் சூர்யாவின் திரைத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அவரது ரெட்ரோ திரைப்படம் முதல்நாளில் உலகளவில் ரூ. 46 கோடி வசூலித்து சாதனை செய்தது.

ADVERTISEMENT

தொடர்ந்து ரெட்ரோ படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் படம் குறித்து பாசிட்டிவான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் ரெட்ரோ திரைப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜை செல்போனில் தொடர்புக் கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட பதிவில், “தலைவர் (ரஜினி) ரெட்ரோவைப் பார்த்தார். அவருக்கு படம் ரொம்பப் பிடிச்சிருக்கு…. 🕺🕺💥💥

அவர் சொன்னை வார்த்தைகள் இதுதான் “என்ன ஒரு அருமையான முயற்சி. இதற்காக உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் பாராட்டுகள். சூர்யாவின் நடிப்பு சூப்பர், படத்தின் கடைசி 40 நிமிடங்கள் சூப்பர்… கிளைமாக்ஸில் LAUGHTER டச் அருமையாக இருந்தது. GOD BLESS!” என ரஜினி தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியின் இந்த பாராட்டால், ”நான் இப்போது வானில் பறக்கிறேன்…. தலைவா ஐ லவ் யூ ❤️” என கார்த்திக் சுப்பராஜ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share