வீல் சேரில் ராகுல் டிராவிட்… என்ன ஆச்சு?

Published On:

| By Kumaresan M

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் நேற்றைய போட்டியின்போது, மைதானத்தில் சக்கர நாற்காலியில் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆட்டம் கவுஹாத்தி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது .rahuldravid in wheel chair

இரு அணி வீரர்களும் அங்கு பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களை மைதானத்தில் ராகுல் டிராவிட் சந்தித்தார். இந்த சமயத்தில் அவர் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் வந்திருந்தார். இதை பார்த்து ,பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

கர்நாடக மாநில கிரிக்கெட் அமைப்பின் லீக் தொடர் ஒன்றில் விஜயா கிரிக்கெட் கிளப் என்ற அணிக்காக ராகுல் டிராவிட் விளையாடியுள்ளார். இந்த ஆட்டத்தின் போது, அவரின் அவரது இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

அவரால் நடக்க முடியாத அளவுக்கு காயம் மோசமானதாக இருந்தது. எனினும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்களுக்கு தொடர்ந்து வீல் சேரில் இருந்தபடியே பயிற்சியும் ஆலோசனையும் வழங்கி வருகிறார். அவரது அர்ப்பணிப்பு உணர்வை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ராஜஸ்தான் ராயல்சின் முதல் போட்டியின் போது, ராகுல் டிராவிட்டை டி.வி.யில் காணவே முடியவில்லை. அப்போது, நடக்க முடியாமல் படுக்கையில் இருந்ததாக கூறுகிறார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டிராவிட்டுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. ஐ.பி.எல் தொடரில் அந்த அணிக்காக நீண்ட காலம் விளையாடியுள்ளார். 39 வயதில் அந்த அணிக்காக கேப்டனாகவும் இருந்துள்ளார். rahuldravid in wheel chair

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐ.பி.எல் தொடரில் முதலில் ஆடிய இரு ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் மார்ச் 30ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குவஹாத்தியில் எதிர்கொள்ள உள்ளது ராஜஸ்தான்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share