ADVERTISEMENT

தமிழ் மக்களின் கண்ணியத்திற்காகப் போராடியவர் கலைஞர்! – காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புகழாரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Rahul

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்களின் கண்ணியத்திற்காகவும், சமூக நீதிக்காகவும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும் அர்ப்பணித்துப் போராடியவர்.

ADVERTISEMENT

அவர் வெறும் முதலமைச்சராக மட்டுமே முத்திரை பதித்தவர் அல்ல; அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், கவிஞர் மற்றும் ஆளுமைமிக்க சிந்தனையாளர். இந்தியாவின் குடிமக்கள் ஒவ்வொருவரையும் சமமாக நடத்தும் ஒரு வலுவான அரசியலமைப்பின் மீது அவர் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.

அவருடைய பிறந்தநாளில், எனது பணிவான அஞ்சலியைச் செலுத்துகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட நிலையில், தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியில் இடம்பெற்று அமைச்சர் பதவியைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக, திமுகவினர் காங்கிரஸ் கட்சியைத் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், கலைஞரின் சமூக நீதிப் பங்களிப்பையும் அவரது பன்முகத் திறமையையும் ராகுல் காந்தி பாராட்டிப் பேசியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share