காலாண்டு, அரையாண்டு தேர்வு : அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Kavi

காலாண்டு அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

2025-25ஆம் கல்வியாண்டு கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது.

ADVERTISEMENT

இந்தநிலையில்  1 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 26 வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என்றும் டிசம்பர் 15; தொடங்கி டிசம்பர் 23 வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும். இத்துடன் பள்ளிக் கல்வித்துறையின்(2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் அடங்கிய பக்கங்களை இணைத்துள்ளோம். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையோடு தயார் ஆகுங்கள்” என்று வாழ்த்து கூறியுள்ளார்.

ADVERTISEMENT

Photo of author
Kavi

கவி... இளங்கலை தகவல் தொழில்நுட்பக் கல்வியில் பட்டம் பெற்றவர். சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகளில் தனித்த கண்ணோட்டத்துடன் 2016ஆம் ஆண்டிலிருந்து சளைக்காமல் எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share