தமிழகத்தில் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக (DGP) மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். யூபிஎஸ்சி (UPSC) மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களைப் பரிந்துரைத்திருந்த நிலையில், மகேஷ் குமார் அகர்வாலைத் தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் தமிழகத்தின் டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து, தற்போது மகேஷ் குமார் அகர்வாலை புதிய டிஜிபியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் அடுத்த இரண்டு ஆண்டுகள் இந்தப் பொறுப்பில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
