மதுரை மாவட்டம், மேலூரில் கிரானைட் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுதொடர்பான வழக்கு, மேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதை, நீதிபதி மகேந்திரபூபதி விசாரித்து வருகிறார். கிரானைட் வழக்கு பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை அனைத்துப் பிரிவுகளிலும் விசாரணை நடத்தவேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிபதி மகேந்திரபூபதி ஒரே பிரிவின்கீழ் மட்டுமே விசாரணை நடத்துகிறார். எனவே, அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக விசாரிக்க உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார்.
மதுரை கிரானைட் வழக்கு: நீதிபதிமீது புகார்
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
