உற்பத்தி குறியீடு: 30ஆவது இடத்தில் இந்தியா!

By Balaji

|

Published on 15 Jan 2018, 12:00 AM

உலக உற்பத்தி குறியீட்டில் இந்தியா 30ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதுகுறித்து உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக உற்பத்திக் குறியீட்டில் இந்தியா 30ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அண்டை நாடான சீனா 5 இடத்துக்குள் உள்ளது. ஜப்பான் இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஜப்பானைத் தொடர்ந்து தென் கொரியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, சீனா, செக் குடியரசு, அமெரிக்கா, ஸ்வீடன், ஆஸ்திரியா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் முறையே 10 இடங்களைப் பிடித்துள்ளன. பிரிக்ஸ் நாடுகளில் ரஷ்யா 35ஆவது இடத்தையும், பிரேசில் 41ஆவது இடத்தையும், தென்னாப்பிரிக்கா 45ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் முதல் 25 இடங்களில் உள்ள நாடுகள் உற்பத்தித் துறை அமைப்பில் சிறந்த நிலையில் விளங்குகின்றன.

ADVERTISEMENT

இந்தியாவைப் பொறுத்தவரையில் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் உற்பத்தித் துறையின் ஊக்குவிப்பில் சிறிய பங்களிப்பை அளித்துள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி 16-20 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உற்பத்தித் துறையின் வளர்ச்சி ஆண்டுக்கு 7 சதவிகிதமாக உள்ளது. உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் நாடாகவும் விளங்குகிறது” என்று கூறப்பட்டுள்ளது.,”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel