காந்தி நினைவிடத்தில் பிரதமர் மரியாதை!

Published On:

| By Kavi

நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் நிறைவடைந்து, இன்று (ஆகஸ்ட் 15) 76ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, காலை 7.30 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றுகிறார்.

ADVERTISEMENT

செங்கோட்டையில் நடைபெறும் இவ்விழாவில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ளவுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த சுற்றுவட்டார பகுதிகளில் சிசிடிவி பொறுத்தி சுமார் 400 சிசிடிவிகள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் கோட்டையில் கொடியேற்றும் பிரதமர் மோடி 75ஆவது சுதந்திர ஆண்டு நிறைவடைந்ததையொட்டி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தசூழலில் கோட்டையில் கொடியேற்ற செல்வதற்கு முன் காந்தி நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT

மகாராஷ்டிரா அமைச்சரவை: ஷிண்டேவை டம்மியாக்கிய பட்னவிஸ்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share