“அவரெல்லாம் இப்போ யாருங்க?”: கூட்டணி குறித்து பேசிய செல்வப்பெருந்தகைக்கு பிரவீன் சக்கரவர்த்தி எம்பி பதிலடி

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுதான் முதல் முறை ஒரு நல்ல கூட்டணி ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என பிரவீன் சக்கரவர்த்தி எம்பி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கா விட்டால் எதற்கு இந்த கூட்டணி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று சென்னையில் பிரவீன் சக்கரவர்த்தி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செல்வப் பெருந்தகையின் விமர்சனம் குறித்த கேள்விக்கு,

ADVERTISEMENT

“யார் அவருங்க இப்போ?

எதுக்குங்க தேவையில்லாமல் வேஸ்ட்டா…

ADVERTISEMENT

இருந்திருக்கலாம். முன்னாள்… கடந்த காலத்துல என்ன வேணா இருந்திருக்கலாம். இப்போ அதெல்லாம் முக்கியமே கிடையாது”என்றார்.

மேலும், “எந்தக் குழப்பமும் இல்லை. நான் பல முறை நான் சொல்லி இருக்கேன்.

ADVERTISEMENT

இப்போ இந்த கூட்டணிக்கு ஒரு பேர் சூட்டுறதுக்காக ஒரு மீட்டிங் நடந்தது. எல்லா தோழமைக் கட்சிகளும் அதுல பங்கேற்றோம். நானும் சென்றிருந்தேன் .

ரெண்டு மணி நேரம் கூட்டம் நடந்தது. முதலமைச்சரும் இருந்தார்.

எல்லோரும் சிரித்து பேசினோம். பிரச்சனை எதுவும் இல்லை.

கூட்டணி ஆட்சி அமைக்கிறதுக்கு முன்பு எவ்வளவு ஸ்ட்ராங்கா இருந்ததோ, அவ்வளவு ஸ்ட்ராங்கா இன்னும் இருக்கிறது.

அதுல எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் இப்பதான் டெல்லியில இருந்து வருகிறேன். நான் நேற்றுதான் எங்க தலைவர் ராகுல் காந்தியோட சந்தித்சேன். அவரோடு இருந்தேன். ஒன்னும் பிரச்சனை எதுவும் இல்லை.

தமிழ்நாடு அரசியல் சூழ்நிலையைப் பற்றியும் பேசப்பட்டது. மத்த விஷயமும் பேசப்பட்டது எனக்கு ஒரு ஆல் இந்தியா பொறுப்பு இருக்கு, அதைப் பற்றியும் பேசினோம். தமிழ்நாடு அரசியல் சூழ்நிலையைப் பற்றியும் பேசப்பட்டது. எங்களுடைய இரண்டு மந்திரிகள் இருக்கிறார்கள். அவங்களுடைய செயல்பாடு எப்படி இருக்கிறது என்று எல்லாம் கூட பேசப்பட்டது.

ஆனால் மீட்டிங்குள்ள என்ன பேசப்பட்டது என்று எல்லாம் நாங்க வெளிப்படையா நான் சொல்ல முடியாது.

ஒரு பிரச்சனையும் இல்லை, சுத்தமா ஒரு சதவீதம் கூட அது பிரச்சனை கிடையாது . தேர்தலுக்கு முன்னாடி கேட்டது என்னது? ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு.

அப்போது சிலர் சொன்னார்கள், தமிழ்நாட்டு மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்கள். இப்போது ஏற்றுக்கொண்டார்களா இல்லையா?

இப்போது எதற்கு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி.. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு. எங்களுக்கு ஒரு மதிப்பு, ஒரு மரியாதை அது கிடைத்துள்ளது. தேர்தலுக்கு முன்னாடியும் இதேதான் கேட்டோம்.

இதில் எந்தக் குழப்பமும் இல்லை. தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுதான் முதல் முறை ஒரு நல்ல கூட்டணி ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை.” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share