டேய்.. நீங்க யாருடா? என்னடா தகுதி இருக்கு? அன்புமணியை ஒருமையில் விளாசிய ‘அக்கா’ ஸ்ரீ காந்தி

Published On:

| By Mathi

Srigandhi Anbumani

பாமகவுக்கு உரிமை கோரும் அக்கட்சியின் தலைவரும் தமது தம்பியுமான டாக்டர் அன்புமணியை பாமக செயல் தலைவரான ஸ்ரீ காந்தி மிக கடுமையாக ஒருமையில் விமர்சித்தார்.

சேலத்தில் இன்று (டிசம்ப 29) நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் ஸ்ரீ காந்தி பேசுகையில், “அய்யாவை எதிர்க்குற அந்த கும்பலைப் பார்த்து நான் ஒன்னே ஒன்னு கேட்கிறேன்.. டேய்.. நீங்க யாருடா? உங்களுக்கு என்னடா தகுதி இருக்கு? அய்யாவை (ராமதாஸை) கேள்வி கேட்க..

ADVERTISEMENT

இன்னைக்கு கோட் சூட் போட்டுகிட்டு காரில வந்து இறங்குறீங்களே தம்பி அன்புமணி.. அந்த கோட் சூட் யாரு கொடுத்தது? (டாக்டர் ராமதாஸ் என பாமகவினர் முழக்கம்).

பாமக என்பது ராமதாஸ் கட்டிய கோட்டை; அவர்தான் இங்கே ராஜா. அன்புமணி ஆதரவாளர்கள், ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தின் அடிமைகள்” என்றார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share