மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை’ (Employment Linked Incentive – ELI) திட்டத்தின் கீழ், தற்போது ‘திட்டம் ஏ’ (Scheme A) மூலம் இளைஞர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட உள்ளது. “புதிய தொழிலாளர்களை ஊக்குவிக்கவும், முறைசார்ந்த வேலைவாய்ப்புகளை (Formal Sector) அதிகரிக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பாஸ்!”
யாருக்கெல்லாம் இந்த ஜாக்பாட்?
நீங்கள் இதற்கு முன் எந்த நிறுவனத்திலும் பணிபுரிந்திருக்கக் கூடாது; அதாவது, இதுவே உங்களது முதல் வேலையாக இருக்க வேண்டும். நீங்கள் பணிபுரியும் நிறுவனம் உங்களை வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) புதிதாகப் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பள வரம்பு: உங்கள் மாதச் சம்பளம் 1,00,000 ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.
உதவித்தொகையாக மொத்தம் 15,000 ரூபாய் உங்களுக்கு வழங்கப்படும். இந்தத் தொகை ஒரேடியாக வராது பாஸ்; தலா 5,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக உங்களது கணக்கில் வந்து சேரும். இந்தத் தொகை நேரடியாக உங்களது வங்கிக் கணக்கிற்கே (DBT – Direct Benefit Transfer) மாற்றப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணியில் சேரும்போது, அந்த நிறுவனம் உங்களை ஈபிஎஃப்ஓ (EPFO) போர்ட்டலில் பதிவு செய்யும்.
உங்களது விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், முதல் முறையாக வேலைக்குச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் நீங்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதியடைவீர்கள். இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற, தொழிலாளர்கள் ஒரு குறிப்பிட்ட ஆன்லைன் பயிற்சியை (Online Course) முடிக்க வேண்டியிருக்கும்.
உங்களுடைய ஈபிஎஃப்ஓ (EPFO) கணக்குடன் ஆதார் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு மிகச் சரியாக இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செஞ்சுக்கோங்க பாஸ். அப்போதான் அந்த 15,000 ரூபாய் ‘ரிசல்ட்’ சொதப்பாம உங்க கைக்கு வரும்!
நீங்க வேலையில சேர்ந்த உடனே உங்களுக்கு வழங்கப்படுற UAN (Universal Account Number) நம்பரை பத்திரமா வச்சுக்கோங்க. அதுதான் உங்க கரியருக்கான ‘கோல்டன் டிக்கெட்’.
அரசாங்கம் தரப்போற அந்த 15,000 ரூபாயை அனாவசியமா செலவு பண்ணாம, ஒரு நல்ல முதலீடா (Investment) மாத்துங்க. உங்க உரிமையை கேளுங்க, சில நிறுவனங்கள் இது பத்தி சொல்லாம இருக்கலாம். அதனால நீங்க வேலையில சேரும்போது, “நான் ஸ்கீம் ஏ-ல (Scheme A) பெனிபிட் வாங்கத் தகுதியானவனா?”ன்னு உங்க எச்.ஆர் (HR) கிட்ட ஒருமுறை கேட்டு கன்பார்ம் பண்ணிக்கோங்க பாஸ்.
ஒரு இளைஞன் முதல் முதலா வேலைக்குப்போய் சம்பாதிக்கும்போது கிடைக்கிற அந்த மகிழ்ச்சியே தனி தான் பாஸ். அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க அரசாங்கம் இந்த 15,000 ரூபாயைக் கொடுக்குது. முதல் அடியே மாஸா இருக்கட்டும், உங்க புதிய வேலை பயணம் சிறப்பா அமையட்டும்.
கூடுதல் விபரங்களுக்கு: epfindia.gov.in
