அமெரிக்கா விமான விபத்தில் இதுவரை ஒருவர் கூட உயிருடன் மீட்கப்படாத நிலையில், விபத்திற்கு முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் பைடனை குற்றஞ்சாட்டியுள்ளார் டிரம்ப். plane crash Trump blames Biden
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் இருந்து வாஷிங்டனில் உள்ள ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு 60 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் விமானம் புறப்பட்டுச் சென்றது.
அமெரிக்க நேரப்படி இரவு 9 மணி அளவில், ரீகன் விமான நிலையத்தின் 33 ஆவது ஓடுபாதையை நோக்கி வந்துகொண்டிருந்த நேரத்தில், 3 பேருடன் அதற்கு நேர் எதிராக பறந்து வந்த அமெரிக்க இராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் மோதியது. பயங்கர சத்தத்துடன் தீப்பிடித்து வெடித்த இரண்டு வானூர்திகளும், போடோமேக் நதியில் விழுந்தன.
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடைத்திற்கு வந்த வாஷிங்டன் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை அதிகாரிகள் மீட்பு பணியில் இறங்கினர். ஆனால், இதுவரை 19 பேரின் உயிரிழந்த உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் உடலை குளிர வைக்கும் ஆற்றில் இருந்து ஒருவர் கூட உயிருடன் மீட்கப்படவில்லை. இதனால் விமான விபத்தில் அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

ஒபாமா, பைடன் தான் காரணம் – டிரம்ப் plane crash Trump blames Biden
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர் பேசுகையில், உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம், உண்மையில் விமானத்தில் பயணித்த மற்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் உட்பட பலரையும் உலுக்கியுள்ளது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டில் பணிபுரிபவர்கள் மிக உயர்ந்த நுண்ணறிவு கொண்டவர்களாக இருக்க வேண்டும். அது மிக உயர்ந்த தரநிலைகள் தேவைப்படும் வேலை.
ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தில் (FAA) பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் (DEI) என யாரும் பார்த்திராத மட்டத்தில் அரசியலை வைத்து ஒபாமா,பைடன் சாதாரணமான ஊழியர்களை நியமித்தனர்.
நான் பாதுகாப்பை முதலில் வைக்கிறேன். திறமையான மக்களை நான் விரும்புகிறேன். அவர் கொள்கையை வைக்கிறார்கள்” என்று டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.