எ.வ.வேலு மகன் சீனா செல்ல அனுமதி : உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் உத்தரவு!

Published On:

| By Kavi

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மகன் குமரனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி திருவண்ணாமலையில் நடந்த திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாட்டுக்கு, மலப்பம்பாடி ஏரியிலிருந்து சட்டவிரோதமாக மண் எடுத்ததாகவும் இதனால் அரசுக்கு 8 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தது.

ADVERTISEMENT

இந்த புகாரை தொடர்ந்து எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் எ.வ. வேலு, எ.வ. குமரன் இருவரும் தங்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

ADVERTISEMENT

ஆனால் எ.வ.வேலுவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை கேட்ட நீதிபதி லட்சுமி நாராயணன், எ.வ.குமரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்தார்.

ADVERTISEMENT

இந்த மனு மீதான விசாரணை மீண்டும் இன்று (அக்டோபர் 16) விசாரணைக்கு வந்தது. அப்போது, எ.வ.குமரனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை தற்காலிகமாக நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், அக்டோபர் 21 முதல் 28, 2026 வரை சீனா செல்ல அவருக்கு அனுமதி அளித்துள்ளார்.

அக்டோபர் 28, 2026 அன்று மீண்டும் இந்தியா திரும்புவார் என்ற மனுதாரரின் உத்தரவாதத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் எ.வ.குமரன் தனது மனைவியின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

எ.வ.வேலு மற்றும் எ.வ.குமரன் இருவரும் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே நவம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share