கோவை, காந்திபுரம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த முதல்வர் ஜோசப் விஜயை சந்தித்து இலவச வீடு கோரி மனு அளிக்க முயன்ற திருப்பூரைச் சேர்ந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி நபர் ஒருவர், அப்பகுதியில் தரையில் படுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். தனக்கு சொந்த வீடு வழங்க வேண்டும் என்று கோரி பல்வேறு கட்டங்களில் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவை வருகை தந்து உள்ள தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்துத் தனது கோரிக்கை மனுவை வழங்க முயற்சித்துள்ளார். ஆனால், பாதுகாப்புக் காரணமாக அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் உள்ளே செல்ல அனுமதி அடையாள அட்டை இல்லாததால் அவரை அதிகாரிகள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை
முதலமைச்சரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் விரக்தி அடைந்த அடைந்த சக்திவேல், பெரியார் அறிவுலகம் செல்லும் பாதையின் நடுவே தரையில் அமர்ந்தும் படுத்தும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் வழி நடுவில் படுத்துத் தனது கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்தது சக்கிவேலை காவல்துறையினர் கைது செய்தனர்.
