Video: கோவையில் முதல்வர் விஜய் ரோடு ஷோ.. குவிந்த தொண்டர்கள்.. திணறிய போலீஸ்!

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தை இன்று முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்.

‘பெரியார் அறிவுலகம்’ திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவருக்கு அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட முதலமைச்சர், அவினாசி சாலை வழியாக சுமார் சுமார் 10 கி.மீ தூரம் விழா நடைபெறும் காந்திபுரம் பகுதிக்கு ரோடு ஷோ செல்கிறார். வழியெங்கும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, விழா இடத்தை அடையும் முதலமைச்சர் விஜய், பெரியார் அறிவுலக முகப்பு பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையையும், திறப்பு விழா கல்வெட்டையும் திறந்து வைக்கவுள்ளார்.

ADVERTISEMENT

தமிழக முதல்வர் ஜோசப் விஜயை பார்ப்பதற்காக பெரியார் அறிவுலகம் அமைந்துள்ள காந்திபுரம் பகுதியில் குவிந்த தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் குழந்தையுடன் முதல்வரை பார்க்க வந்தவரை காவல் துறையினர் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தினர்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் அருகே மத்திய பேருந்து நிலையம் இருப்பதால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share