திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் கூட்டம் நாளை (அக்டோபர் 17-ந் தேதி) சென்னையில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று (அக்டோபர் 15) வெளியிட்டுள்ள அறிக்கை: மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 17-ந் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும்.
இந்தக் கூட்டத்தில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
