உதயநிதிக்கு எதிரான மனு : உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Kavi

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான புகார் மனுவை எண்ணிட கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது வேட்பு மனுவில் விவரங்களை மறைத்துள்ளார் என்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேனியைச் சேர்ந்த மிலானி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 8ம் தேதி புகார் மனு தாக்கல் செய்திருந்தார். 

ADVERTISEMENT

தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்த அவர், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஒரு மாதம் கடந்தும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அந்த மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

இந்த மனுவை கடந்த அக்டோபர் 13ஆம் தேதி விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், மிலானி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க எத்தனை நாட்கள் ஆகும் என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார். 

ADVERTISEMENT

அதன்படி இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் சார்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

அதில் மிலானி தாக்கல் செய்த புகார் மனு மீது எண் வழங்கப்பட்டு முன்னறிவிப்பு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது  என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ADVERTISEMENT

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி லட்சுமி நாராயணன், மிலானி தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share