கோவையில் பதற்றம் : விஜய்யை பார்க்க வந்த பெண்கள் அடுத்தடுத்து மயக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவையில் முதல்வர் விஜய்யை பார்க்க வந்த பெண்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

தமிழக முதல்வர் ஜோசப் விஜயை வரவேற்பதற்காக கோவை விமான நிலையம் முதல் அவினாசி சாலை வரை கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டனர். இருப்பினும், விமான நிலையம் முதல் அவினாசி சாலை வரையிலான பகுதிகளில் பொதுமக்களைச் சாலையோரத்தில் நிற்க காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.

ADVERTISEMENT

முதல்வர் ஜோசப் விஜயைக் காண்பதற்காகக் குவிந்த கல்லூரி மாணவர்கள், அவரது புகைப்படம் இடம்பெற்ற முகமூடிகளை அணிந்து உற்சாகத்துடன் முதல்வரை வரவேற்றனர்.

இதற்கிடையே, தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் உருவப்படத்தைத் தனது கையால் வரைந்த குழந்தை ஒன்று, அந்த ஓவியத்தை முதல்வரிடம் நேரில் வழங்க முடியாமல் ஏக்கத்துடன் காத்திருந்தது. முதல்வரை நேரில் சந்தித்து தான் வரைந்த ஓவியத்தை வழங்க வேண்டும் என்ற குழந்தையின் ஆசை நிறைவேறாதது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

ADVERTISEMENT

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சார்லஸ், தனது தாயாருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக ஐந்து நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்துள்ளார். அவரது தாயாருக்கு கோவையில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கோவைக்கு வருகை தருவதை அறிந்த சார்லஸ், அவரைப் பார்ப்பதற்காக வந்துள்ளார். ஆனால், கூட்ட நெரிசல் காரணமாக விஜய்யை நேரில் பார்க்க முடியவில்லை என ஏமாற்றமடைந்துள்ளார்.

முதல்வர் விஜய்யை பார்க்க பெரியார் நூலகம் அமைந்த காந்திபுரம் பகுதியில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். இந்நிலையில் கடும் வெயில் காரணமாக கூட்டத்தில் இருந்த 4 பெண்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதில் 2 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டதால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

விழா நடந்த பகுதியில் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட வில்லை என்றும் இதனால் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆனததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share