பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

Published On:

| By Kavi

கோவையில் பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் இன்று (அக்டோபர் 16) தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் திமுக ஆட்சி காலத்தில் 2024 ஆம் ஆண்டு கோவை காந்திபுரத்தில், சிறைத்துறைக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலப்பரப்பில் பொதுப்பணித் துறையின் மூலம் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரியார் அறிவுலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

ADVERTISEMENT

1.98 லட்சம் சதுர பரப்பளவில், ஏழு தளங்களுடன் பிரம்மாண்டமாக இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது.

இந்த நூலகம் ஏ மற்றும் பி பிளாக் என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அறிவியல் மையம், விண்வெளி தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள உதவும் கோளரங்கம் மற்றும் ‘ஸ்பேஸ் லிஃப்ட்’ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

மாணவர்கள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை பலரும் பயன்பெறும் வகையில் பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார். அங்கு அமைக்கப்பட்ட பெரியார் சிலையையும் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து நூலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்த முதல்வர் விஜய், அறிவுலகத்தில் குழந்தைகளுடனும் கலந்துரையாடினார். சுமார் 40 நிமிடங்கள் இந்த நூலகத்தை பார்வையிட்டார்.

இதற்கிடையே முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் திராவிட மாடல் அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது

யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை?

எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு அமைச்சர் ராஜ்மோகன், திமுகவினர் அவர்கள் சொந்த பணத்தில் இதை கட்டவில்லை. மக்கள் வரிப்பணத்தில் தான் கட்டப்பட்டுள்ளது என்று பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share