உத்தரப்பிரதேசத்தில் தேசியப் புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ) அதிகாரியான தன்சில் அகமது கடந்த, ஏப்ரல் 3ம் தேதியன்று உறவினர் வீட்டு விழாவில், மனைவி ஃபர்ஸானா மற்றும் குழந்தைகளுடன் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது பைக்கில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதலில் அகமதுவின் 14 வயது மகளும், 12 வயது மகனும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், கொலை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தை கைப்பற்றிய போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.