கட்சியை வலுப்படுத்தவும், அதிமுகவின் எதிர்கால நலனுக்காகவும் ஒன்றிணைந்து செயல்பட எடப்பாடிக்கு ஓ. பன்னீர் செல்வம் அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராகத் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நேற்று (ஆகஸ்ட் 17) தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்த தீர்ப்பில், ” அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன் இருந்த நிலைதான் நீடிக்கும். ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து தான் பொதுக் குழு கூட்டத்தை கூட்ட வேண்டும். பொதுக்குழுவைக் கூட்ட பிரச்சினை ஏற்பட்டால் நீதிமன்றத்தை அணுகி சட்ட ஆணையரை நியமிக்கலாம்” என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். நேற்று எடப்பாடி மாவட்டமான சேலத்திலேயே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் கட்சியை வலுப்படுத்தவும், அதிமுகவின் எதிர்கால நலனுக்காகவும் ஒன்றிணைந்து செயல்பட வருமாறு எடப்பாடிக்கு ஓ. பன்னீர் செல்வம் அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
- க.சீனிவாசன்
