18 மாத பிளான்… உக்ரைன் பயன்படுத்திய ஆயுதம்… அதிர்ச்சியில் புதின்

Published On:

| By Minnambalam Desk

operation spiderweb ukraine use fpv drones

உக்ரைன் – ரஷ்யா போர் கடந்த 2022 பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கி மிக உக்கிரமாக நடைபெற்று வருகிறது. இது 21ஆம் நூற்றாண்டில் நிகழும் மிகப்பெரிய மற்றும் அதிக விளைவுகள் ஏற்படுத்தும் யுத்தங்களில் ஒன்றாகும். operation spiderweb ukraine use fpv drones

இதனால் உலக அரசியலும், பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்பொழுது வரையில் இந்தப் போரில் உக்ரைன் தான் அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

ADVERTISEMENT

கடந்த மூன்று ஆண்டு கால போரின் விளைவாக உக்கரை நாட்டின் 20 சதவீத பகுதிகள் தற்பொழுது ரஷ்யா வசம் உள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், போர் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று டிரம்ப் தொடர்ச்சியான அழுத்தங்களை கொடுத்தார்.

ADVERTISEMENT

போர் முடிவுக்கு வந்தால் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகள் அனைத்தும் அவர்களுக்கு சொந்தம் ஆகிவிடும்.

இதனால் போரை முடிவுக்கு கொண்டு வராமல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியை தொடர்ச்சியாக ஜெலன்ஸ்கி நாடினார்.

ADVERTISEMENT

இதனிடையே உக்ரைனுக்கான அமெரிக்காவின் உதவிகள் குறைந்து கொண்டு வந்த நிலையில், ஐரோப்பிய நாடுகள் தொடர்ச்சியான ஆதரவை அளித்து வந்தன.

இந்த நிலையில்தான் உக்ரைன், “ஆபரேஷன் ஸ்பைடர் வெப்” எனும் திட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 1 ஆம் தேதி ரஷ்யாவின் முக்கிய பகுதிகளில் உள்ள ஐந்து ராணுவ விமான தளங்களில் மாபெரும் ட்ரோன் தாக்குதல் நடத்தி 41 விமானங்களை அழித்ததாக அறிவித்துள்ளது.

இந்த தாக்குதல், உக்ரைன் – ரஷ்யா யுத்தம் தொடங்கிய பிப்ரவரி 2022-க்கு பிறகு, ரஷ்யா இதுவரை சந்தித்த மிகப்பெரிய தாக்குதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி, “இது வரலாற்றில் இடம் பெறும் வகையில் சிறப்பான வெற்றி” என கூறியுள்ளார். இத்திட்டமானது கடந்த 18 மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டதாகவும், இதில் ஈடுபட்டவர்கள் ரஷ்யாவில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக உக்ரைன் ராணுவம் 117 FPV (First Person View) ட்ரோன்கள் ரஷ்யாவின் உட்பகுதிகளில் மரக்கட்டிடங்களில் மறைக்கப்பட்டு, லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன. இந்த லாரிகளில் இருந்த மின்னணு கட்டுப்பாடு வாயிலாக கூரைகள் திறக்கப்பட்டு, ட்ரோன்கள் வெளியேறி விமான தளங்களை குறி வைத்து தாக்கின.

முக்கிய விமானத் தளங்கள் முர்மான்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரயசான் மற்றும் அமூர் மாகாணங்களில் உள்ளன. இந்தத் தாக்குதலால் ரஷ்ய விமானப் படைக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ரஷ்யாவின் Tu-22M3 மற்றும் Tu-95 போன்ற ஸ்டிராட்டஜிக் பாம்பர்கள், மேலும், A-50 எச்சரிக்கை விமானங்கள் சேதமடைந்தன.

இந்த விமானங்களில் பெரும்பாலானவை தயாரிப்பில் இல்லாதவை. இதனால் மறுபடியும் உருவாக்க கடினமாகிவிட்டது. ரஷ்யாவின் ஸ்டிராட்டஜிக் பாம்பர் கம்பியின் சுமார் மூன்றில் ஒரு பங்கு அழிந்ததாக கருதப்படுகிறது.

FPV ட்ரோன்களின் தாக்கம்:

FPV ட்ரோன்கள், முன்பாக கேமராவை கொண்டு, நேரடி காட்சி வழங்கும் சிறிய ட்ரோன்கள். ஒரு FPV ட்ரோனின் செலவு சுமார் ரூ.42,000 ($500) மட்டுமே. குறைந்த செலவில், அதிக அழுத்தம் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

ரஷ்யாவின் வலுவான விமானப்படை கூட, இந்த சிக்கலான FPV ட்ரோன்கள் முன்னிலையில் மிகுந்த சேதத்தை சந்தித்துள்ளது.

உற்பத்தி திறன் உயருகிறது

உக்ரைன், 2025-க்குள் நான்கு மில்லியன் FPV ட்ரோன்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பது, சீனாவிலிருந்து வரும் சிப் மற்றும் பேட்டரி போன்ற உபகரணங்களுக்கு மாற்றாக செயல் படுகிறது.

ரஷ்யா பதில்!

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், ஐந்து விமான தளங்களில் தாக்குதல் நடந்ததை உறுதி செய்துள்ளது. சில தாக்குதல்களை தடுக்க முடிந்ததாக கூறியுள்ளது.

இந்த தாக்குதல், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே துருக்கியின் தலைநகரான இஸ்தான்புளில் நடக்கும் சமாதான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நடந்தது. இந்த பேச்சுவார்த்தைகள் ஜூன் 2 ஆம் தேதி நடைபெற்றது, ஆனால் முடிவுகள் வெளிவரவில்லை.

இந்த தாக்குதல், சிறிய மற்றும் குறைந்த செலவிலான ட்ரோன்கள் மூலம், ஒரு பெரும் இராணுவ சக்தியின் விமானப்படை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான சான்றாக பார்க்கப்படுகிறது. மாறும் யுத்த நுட்பங்களில் இது ஒரு முக்கியமான கட்டமாக வரலாற்றில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், உக்ரைனின் இந்த யுத்தத்தால் ரஷ்யாவிற்கு இந்திய மதிப்பில் 5,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share