முடி வளர்ச்சிக்கு உதவும் முக்கியமான வீட்டு வைத்தியக் குறிப்புகளை காண்போம். இவை எளிதில் நமக்கு கிடைக்கக் கூடியவை.
முடி வளர்ச்சிக்காக நம்மில் பலரும் பல வழிகளை முயற்சி செய்கிறோம். விலை உயர்ந்த சீரம்கள், எண்ணெய்கள், மருந்துகள் என இவற்றில் பல எந்தப் பலனையும் தருவதில்லை. முடியைப் பொறுத்தவரை, செயற்கை முறைகள் எந்தப் பலனையும் தருவதில்லை. ஆனால், முடி வளர்ச்சிக்கு சில வீட்டு வைத்திய முறைகள் (Home remedies for hair) உதவுகின்றன. முடி வளர்ச்சிக்கு மட்டுமல்ல, பல முடிப் பிரச்சனைகளுக்கும் இதுபோன்ற இயற்கை முறைகள் நல்ல தீர்வுகளாகும். முடி வளர்ச்சிக்கு உதவும் சில வீட்டு வைத்திய முறைகள் குறித்து தெரிந்துகொள்வோம். அவற்றை பின்பற்றும் வழிமுறைகளும் கூட மிகவும் எளிதானதுதான்.
வெங்காயச் சாறு
வெங்காயச் சாறு என்பது முடி வளர்ச்சிக்கு முக்கியமான பலனைத் தருகிறது. வெங்காயச் சாற்றில் உள்ள கந்தகம் நமக்கு சிறைந்த பலனை அளிக்கிறது. இது புதிய முடி (onion juice for hair growth) வளர உதவுகிறது. முடி இல்லாத இடங்களில்கூட முடி வளர உதவும் பொருட்களில் வெங்காயச் சாறும் ஒன்றாகும். இது நரை முடியைத் தடுக்கவும் நல்லது முடிக்கு வலிமையையும் வளர்ச்சியையும் கொடுக்கும் பொருட்களில் வெங்காயச் சாறும் ஒன்றாகும்.
வெந்தயம் முடிக்கு நல்லது
வெந்தயம் முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வெந்தயத்தை தண்ணீர் ஊற்றி அரைத்து, ஷாம்பூவுக்குப் பதிலாகத் தலைக்குத் தடவலாம். வெந்தயத்தைச் (fenugreek benifits for hair) சாப்பிடுவதும் நல்லது. அதில் உள்ள ஈஸ்ட்ரோஜன், முடி வளர்ச்சிக்கு உதவும் ஒரு கூறாகும். இது முடி வளர்ச்சிக்கும், பொடுகு போன்ற பல பிரச்சனைகளுக்கும் ஒரு நல்ல மருந்தாக உள்ளது.
கற்றாழை
கற்றாழை முடி வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான வீட்டு வைத்தியம் ஆகும். இது பல முடி பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல மருந்தாகும். இது முடிக்கு பளபளப்பையும் மென்மையையும் அளிக்கிறது. கற்றாழை ஜெல்லை (Aloe vera gel for hair nourishment) பிரித்து எடுத்து தலையில் தடவி அது காய்ந்த பின் குளிப்பது நன்மை அளிக்கிறது. அதேபோல், செம்பருத்தியும் முடி வளர்ச்சிக்கு நல்லது. அதை அரிசி வடித்த தண்ணீரில் கலந்து தலையில் தடவுவது மிகவும் நன்மை தரும். அரிசி வடித்த தண்ணீரும் முடி ஆரோக்கியத்திற்கு ஒரு நல்ல வீட்டு வைத்தியம் ஆகும்.
தேங்காய் எண்ணெய்
நாம் வழக்கமாகவே தேங்காய் எண்ணெய் பயன்படுத்திதான் வருகிறோம். ஆனால், தற்போதைய வாழ்க்கை முறையில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டோம். தேங்காய் எண்ணெய் (Coconut oil for hair) முடி வளர்ச்சியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை உச்சந்தலையில் மசாஜ் செய்வது முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வேர்களை வலுப்படுத்துகிறது.
கடுகு எண்ணெய் + கருவேப்பிலை
கடுகு எண்ணெய் முடி வளர்ச்சிக்கு நல்லது. அதை கறிவேப்பிலையுடன் சேர்த்துப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் கிடைக்கும். கறிவேப்பிலை (curry leaves benefits) முடி ஆரோக்கியத்திற்கும் நல்லது. இது நரை முடியைக் குணப்படுத்தவும் முடி வளர்ச்சிக்கும் பயன்படுகிறது. கடுகு எண்ணெயும் முடிக்கு பல நன்மைகளைக் கொண்டுள்ளது. கடுகு எண்ணெய் குறிப்பாக வறண்ட முடிக்கு மிகவும் நல்லது.
இதேபோல விளக்கெண்ணெயும் முடி ஆரோக்கியத்திற்கு நல்லது. விளக்கெண்ணெயை (Castor oil) தேங்காய் எண்ணெய் போன்ற மற்ற எண்ணெய்களுடன் கலக்கலாம். இது பொதுவாக அடர்த்தியாக இருக்கும். இதனால்தான் இதை மற்ற எண்ணெய்களுடன் சேர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
