சருமம் செம பொலிவாக மாற.. வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய ஸ்கிரப்ஸ் லிஸ்ட்!

Published On:

| By Minnambalam Desk

Scrub

சருமத்தை இயற்கையாக அழகாகவும், பொலிவாகவும் மாற்றக்கூடிய ஸ்கிரப்கள் குறித்து பார்க்கலாம்.

முக அழகு என்பது அனைவரும் விரும்பக்கூடிய ஒன்றாகவே உள்ளது. முகத்தை அழகாக்க பல்வேறு க்ரீம்கள், ஸ்கிரப்களை பயன்படுத்துகிறோம். அதே சமயம் பெரும்பாலான ஸ்க்ரப்களில் சருமத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனங்கள் உள்ளன. இதற்கு பதிலாக இயற்கையான பொருட்களைக் கொண்டு  தயாரிக்கப்படும் ஸ்கிரப்களை நாம் பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு தீங்கு விளைவிக்காது என்பதோடு, முக அழகையும் கூட்டுகிறது.  கடலை மாவு, முல்தானி மட்டி, தேன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இயற்கை ஸ்கிரப்புகளை தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

ADVERTISEMENT

வறண்ட சருமத்திற்கான ஸ்கிரப்

இயற்கையாகவே வறண்டதாகவும், சொரசொரப்பாகவும், பொலிவிழந்ததாகவும் இருக்கும் சருமங்களுக்கு ஊட்டமளிக்கும் ஸ்கிரப்பை தயாரிக்கலாம். அதற்கு கடலை மாவு, தேன், பாதாம் எண்ணெய், ரோஸ் வாட்டர் ஆகியவை தேவைப்படும். 2 தேக்கரண்டி பாதாம் எண்ணெயுடன் 3 தேக்கரண்டி கடலை மாவைக் (Scrub for dry skin) கலக்க வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்க்க வேண்டும். பசை போன்று மாறிய இந்த கலவையை தண்ணீர் போல மாற்ற ரோஸ் வாட்டரை சேர்க்க வேண்டும். இதனை முகத்தில் அப்ளை செய்யலாம்.

ADVERTISEMENT

கடலை மாவு, சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றாமல், அசுத்தங்களைச் சுத்தப்படுத்துகிறது. பாதாம் எண்ணெய் சருமத்தை மென்மையாக்கும் பண்புகள் நிறைந்தது. தேன் ஒரு இயற்கையான ஈரப்பதமூட்டி என்பதால் அது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. ரோஸ் வாட்டர் சருமத்தைக் குளிர்விக்க உதவுகிறது. இந்த ஸ்கிரப் சருமத்தை மென்மையாக சுத்தம் செய்து, இறந்த செல்களை நீக்குகிறது. சருமம் ஆரோக்கியமாகவும் (Skin healthy) பொலிவுடனும் இருக்க உதவுகிறது.

எண்ணெய் சருமத்திற்கான ஸ்கிரப்

ADVERTISEMENT

எண்ணெய் சருமம் எளிதில் அழற்சியாகிவிடக் கூடியது. இது அதிக சென்சிட்டிவ் கொண்டதாகவும், பித்தம் நிறைந்ததாகவும் உள்ளது. உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கான (Scrub for oily skin) வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய ஸ்க்ரப்புக்கு ரோஸ் வாட்டர், முல்தானி மட்டி, கற்றாழை ஜெல், தேன் ஆகியவை தேவை. முதலில் 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை, 3 தேக்கரண்டி முல்தானி மட்டியுடன் கலக்க வேண்டும். அதில் 1 தேக்கரண்டி தேனை சேர்க்க வேண்டும். இந்த கலவையில் 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்க வேண்டும். இவை அனைத்தையும் மென்மையான பசையாக மாறும் வரை கலக்க வேண்டும். அதன்பிறகு முகத்துக்கு பயன்படுத்த வேண்டும்.

இதைப் பயன்படுத்துவது சரும அழற்சியைக் குறைக்கிறது. முல்தானி மட்டி சருமத்தின் ஆழம் வரை ஊடுருவி, அதிகப்படியான எண்ணெயை உறிந்துகொள்கிறது. கற்றாழை (Benefits of aloe vera gel) சருமத்தைக் குளிர்விக்க உதவுகிறது.  ரோஸ் வாட்டர் சருமத்திற்குப் புத்துணர்ச்சியையும் பொலிவான தோற்றத்தையும் அளிக்க உதவுகிறது. இந்த ஸ்கிரப் சருமத் துளைகளை அடைக்காமல், சருமப் பொலிவை மேம்படுத்த உதவுகிறது.

சென்சிட்டிவ் சருமத்திற்கான ஸ்கிரப்

சென்சிட்டிவ் சருமத்தை எரிச்சலூட்டாமல் ஆழமாகச் சுத்தம் செய்யக்கூடிய ஒரு மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டர் ஸ்கிரப் இதற்கு சிறந்த தேர்வாகும். ஓட்ஸ்,தேன், பால், கற்றாழை ஜெல் ஆகியவை இதற்கு தேவைப்படுகிறது. இரண்டு தேக்கரண்டி நன்றாக அரைத்த ஓட்ஸை ஒரு கிண்ணத்தில் (Scrub for sensitive skin) எடுத்துக்கொள்ளவும், அதனுடன் 1 தேக்கரண்டி தேன் சேர்க்கலாம். பிறகு 1-2 தேக்கரண்டி பால் சேர்க்கவும், அதற்குப் பதிலாக அதே அளவு தண்ணீரையும் கூட சேர்க்கலாம். சிறிதளவு கற்றாழை ஜெல்லைச் சேர்க்கவும். இவை அனைத்தையும் நன்றாக கலக்கிய பிறகு முகத்துக்கு பயன்படுத்தவும்.

ஓட்ஸ் சரும எரிச்சல்களைத் தணிக்க உதவுகிறது, பாலில் உள்ள (milk glow skin) இயற்கையான நொதிகள், சருமத்தை மென்மையாக உரித்து, இறந்த செல்களை நீக்குகின்றன. கற்றாழை சருமத்தை இதமாக்கி குளிர்ச்சியூட்டுகிறது. இந்த ஸ்கிரப் சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் மாற உதவும்.

ஸ்கிரப்பை எப்படி பயன்படுத்துவது?

முதலில் உங்கள் சருமத்தை வெதுவெதுப்பான நீரால் சுத்தம் செய்ய வேண்டும். இது உங்கள் சருமத் துளைகளைத் திறந்து, ஆழமாகச் சுத்தம் செய்ய உதவும். தயாரிக்கப்பட்ட ஸ்கிரப்பை (how to use scrub) சிறிதளவு எடுத்து, 3 முதல் 5 நிமிடங்கள் வரை முகத்தில் மசாஜ் செய்யவும். வெதுவெதுப்பான நீரில் கழுவி, பின்னர் மென்மையான துண்டால் சருமத்தை மெதுவாகத் துடைக்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share