முடி வளர்ச்சிக்கு (Hair Growth) நல்லெண்ணெய்யுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டிய எண்ணெய்களும் அவற்றின் பயன்களும் குறித்துப் பார்க்கலாம்.
முடி என்பது பலரும் தங்களது அழகின் முக்கிய அங்கமாக பார்க்கிறார்கள். அடர்த்தியான, அழகான கூந்தல் வேண்டும் என்பது அனைவரின் கனவாகும். ஆனாலும், இப்போதெல்லாம் பரபரப்பான வாழ்க்கை, மன அழுத்தம், மாசுபாடு, துரித உணவுகள் மற்றும் ரசாயனம் நிறைந்த ஷாம்பூக்களின் பயன்பாடு ஆகியவற்றால் இளம் வயதிலேயே முடி உதிர்தல், முடி மெலிதல் அல்லது நரைத்தல் ஒரு பெரும் பிரச்சனையாகிவிட்டது.
ஆனால், முடி அடர்த்தியாக வளரவும், முடி உதிர்வைத் (Hair growth oils) தடுக்கவும் நம் இயற்கையான எண்ணெய்களால் முடியும். அதற்காக நாம் விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தத் தேவையில்லை. நல்லெண்ணெயுடன் வேறு என்னென்ன எண்ணெய்களைக் கலக்கலாம் மற்றும் அவற்றின் நன்மைகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
நல்லெண்ணெய் + ஆமணக்கு எண்ணெய்
முடி வளர்ச்சிக்கு ஆமணக்கு எண்ணெய் சிறந்தது. இதில் ரிசினோலிக் அமிலம் உள்ளது. ஆமணக்கு எண்ணெயை நல்லெண்ணெயுடன் கலந்து முடியில் மசாஜ் செய்வது முடி வேர்களை வலுப்படுத்துகிறது. இது முடி உதிர்வைக் குறைத்து, முடியை (Olive oil + castor oil) அடர்த்தியாக வளரச் செய்கிறது. நல்லெண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெயை சம விகிதத்தில் கலந்து உச்சந்தலையில் மசாஜ் செய்வது நல்லது. இவ்வாறு செய்வது தலைக்கு இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது.
நல்லெண்ணெய் + தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் கலவையானது முடிக்கு நல்ல ஊட்டச்சத்தை அளிக்கிறது. இது முடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. இந்தக் கலவையில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மயிர்க்கால்களை வலுப்படுத்துகின்றன. இது முடி (Olive oil + coconut oil) உடைவதைக் குறைக்கவும், முடியை அடர்த்தியாக வளரச் செய்யவும் உதவுகிறது. தேங்காய் எண்ணெய் முடியின் உள் அடுக்கிற்குள் ஊடுருவி, புரத இழப்பைக் குறைக்கிறது.
நல்லெண்ணெய் + பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் கலவையானது கூந்தலுக்கு ஊக்கமளிக்கிறது. குறிப்பாக, உங்கள் தலைமுடிக்கு இயற்கையான பளபளப்பு இல்லாமல் அதிக அளவில் முடி உதிர்ந்தால், ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் கலவை உங்களுக்கு பயன்படும். பாதாம் எண்ணெயில் (Olive oil + almond oil) வைட்டமின் ஈ, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை முடியை மென்மையாக்குவது மட்டுமல்லாமல், முடிக்குத் தேவையான வலிமையையும் அளிக்கின்றன. பாதாம் எண்ணெயின் அழற்சி எதிர்ப்புப் பண்புகள், உச்சந்தலையில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கின்றன.
நல்லெண்ணெய் + ரோஸ்மேரி எண்ணெய்
ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவை முடி வளர்ச்சிக்கு உகந்தவை. ரோஸ்மேரி போன்ற அடர்த்தியான எண்ணெய்களை நேரடியாகத் தோலில் தடவக்கூடாது. நல்லெண்ணய் உடன் சேர்த்தே பயன்படுத்த வேண்டும். நல்லெண்ணெய் (Olive oil + rosemary oil) அடர்த்தியைக் குறைத்து, மயிர்க்கால்களை வலுப்படுத்துகிறது. இது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்க்கால்களுக்கு ஆக்ஸிஜனும் ஊட்டச்சத்துக்களும் கிடைப்பதை உறுதி செய்கிறது. இது தவிர, ரோஸ்மேரி எண்ணெய் முடியின் இயற்கையான நிறத்தைப் பாதுகாக்கிறது. வழுக்கை ஏற்படும் அபாயத்தைத் தாமதப்படுத்த ரோஸ்மேரி உதவுகிறது.
